Aran Sei

குடிமக்கள் பதிவேட்டை உருவாக்கும் பூர்வீக இஸ்ஸாமியர்கள் – குடியுரிமை சிக்கலை தவிர்க்க ஜனகோஸ்தியா சம்மனே பரிஷத் முடிவு

சாம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இஸ்ஸாமியர்கள் தாங்களே சிறிய அளவிலான தேசிய குடிமக்கள் பதிவேட்டை(NRC) உருவாக்க முடிவுசெய்திருப்பதாக  தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ஜனகோஸ்தியா சம்மனே பரிஷத்(JSP), பூர்வீக இஸ்ஸாமியர்களுக்கும் புலம்பெயர் இஸ்ஸாமியர்களுக்கும் ஏற்படும் குடியுரிமை அடையாளச்சிக்கலைத் தவிர்க்க அசாமில் பூர்வீகமாக வசிக்கும் இஸ்ஸாமியர்களின் குடியுரிமை ஆவணங்களை இணையவழியில் சேகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் பதிவேடு கணக்கெடுப்புக்கான ஆயத்தங்கள் தொடங்குகின்றன – மீண்டும் குடியுரிமை பிரச்சினை?

2019-ம் ஆண்டில் மத்தியஅரசு நிறைவேற்றிய குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ) இஸ்லாமியர்களைக் குடியுரிமை பெறுவதிலிருந்து விலக்கி வைக்கிறது. அதன்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆவணங்கள் இல்லாதவர்கள், இஸ்லாமியர்கள் அல்லாதவராக இருந்தால் இந்திய குடியுரிமை கோர இயலும். ஆனால், பலர்  இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இஸ்ஸாமியர்களுக்கு போதிய ஆவணமில்லை என்று குடியுரிமையும் மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அசாமில் ஜே.எஸ்.பி அமைப்பு அசாமில் வசிக்கும் பூர்வீக இஸ்ஸாமியர்களாகளான  கோரியா, மொரியா, தோஷி ஆகியோரிடமிருந்து குடிமக்கள் பதிவேட்டிற்கு ஆவணங்கள் திரட்ட உள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய மக்கள்தொகை பதிவேட்டை எதிர்த்துப் போராட தயார் – அசாதுதீன் ஓவைசி

 

மேலும், இந்த சிறிய குடிமக்கள் பதிவேட்டில் பூர்வீக இஸ்ஸாமியர்களாக பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் இஸ்ஸாமியத்திற்கு மதம்மாறியவர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளதாகவும், அதுமட்டுமல்லாது பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பின் மதம்மாறிய ஜோலஹாஸ் இஸ்ஸாமியர்கள் இந்ந நடவடிக்கையில் பூர்வீக இஸ்ஸாமியர்களாக குறிப்பிடப்படவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.

காங்கிரஸ் வெற்றி பெற்றால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மட்டோம் – ராகுல் காந்தி

 

இந்நிலையில் வரும் ஏப்ரல் 15 முதல் இதற்கான பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது. கிட்டத்தட்ட 40 லட்சம் இஸ்ஸாமியர்கள் பதிய உள்ளதாகவும் ஜனகோஸ்தியா சம்மனே பரிஷத் அமைப்பு அறிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்