Aran Sei

அஸ்ஸாமில் மதரசாக்களை மூட பாஜக திட்டம் – எதிர்ப்பிற்கிடையே மசோதா தாக்கல்

சாமை ஆளும் பாஜக அரசு, வரும் 2021 ஏப்ரல் மாதம், மதரசாக்களை ஒழித்து பொதுப் பள்ளிகளாக மாற்றும் மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

அசாம் சட்டப்பேரவையின் குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று (28-12-20), கல்வித்துறை அமைச்சர் ஹேமந்தா பிஸ்வா ஷர்மா, அசாம் ரிபீலிங் (ரத்து செய்வது அல்லது திரும்ப பெறுவது) மசோதாவை தாக்கல் செய்துள்ளார் என தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மசோதா தற்போது நடைமுறையில் இருக்கும் இரண்டு சட்டங்களை (அசாம் மதராசா கல்விச் சட்டம் 1995, அசாம் மதராசா கல்விச் சட்டம் 2018) ரத்து செய்கிறது.

“இந்த மசோதா தனியார் மதராசாக்களைக் கட்டுப்படுத்துவதற்கும் ரத்து செய்வதற்கும் அல்ல,” என்று சர்மா கூறியுள்ளார். இந்த மசோதாவின் பொருள்கள் மற்றும் காரணங்களின் பிரிவில் “தனியார்” என்ற வார்த்தையை தவறுதலாக சேர்த்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநில அரசு, சுமார் 610-க்கும் மேற்பட்ட மதரசாக்களை நடத்தி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து மதராசா நிறுவனங்களும் தொடக்கப்பள்ளியாகவும், உயர்நிலைப்பள்ளியாகவும், மேல்நிலைப்பள்ளியாகவும் மாற்றப்படும் என கூறியுள்ள அமைச்சர், மதராசாவில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதோருக்கும் அவர்களுடைய வேலை, ஊதியம், சலுகைகள் என அனைத்தும் சரியாக கிடைக்கும் என கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்