Aran Sei

காற்சட்டை அணிந்திருந்த மாணவியை தேர்வுக்கு அனுமதிக்காத கல்லூரி – நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அமைச்சருக்கு மாணவி கடிதம்

சாம் மாநிலம் தேஷ்பூர் பகுதியில் நடந்த வேளாண் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வில் பங்கேற்கச் சென்றப் பெண் காற்சட்டை அணிந்திருந்தார் என்பதற்காகத் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

தேஷ்பூர் பகுதியில் உள்ள கிரிஜானந்தா சவுத்ரி மருந்து அறிவியல் நிறுவனத்தில் நடந்த  நுழைவுத் தேர்வில் பங்கேற்க சென்ற மாணவி ஜூப்ளி தமுலி காற்சட்டை அணிந்து சென்ற நிலையில் அங்கிருந்து தேர்வுக்கண்காணிப்பாளர் முழுகாற்சட்டை அணிந்தால் மட்டுமே அனுமதிப்பேன் என்று கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, தேர்வுக்கான நுழைவுச்சீட்டைக் காட்டி அதில் உடை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், சிலதினங்களுக்கு முன்னர் நடந்த நீட் தேர்வுக்கும் இதே உடைஅணிந்து பங்கேற்றதாகவும்  மாணவி ஜூப்ளி தமுலி கூறிய நிலையிலும் தேர்வுக்கண்காணிப்பாளர் அதை ஏற்க மறுத்துள்ளார்.

மேலும், முழுக்காற்சட்டை அணிந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

எனவே, அவரது தந்தை மாணவி ஜூப்ளி தமுலிக்காக  முழுக்காற்சட்டை வாங்க எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சந்தைக்குச் சென்றவர் குறித்த நேரத்திற்கு வராததால், அங்கிருந்த திரைச்சீலையால் கால்களை மூடியபடி  ஜூப்ளி  தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள ஜூப்ளி தமுலி, இது நியாயமற்ற செயல்  மற்றும் “துன்புறுத்தப்பட்டதாக” உணர்ந்ததாகவும்  கூறியுள்ளார்.

மேலும், இதுகுறித்து  அம்மாநில கல்வித்துறை அமைச்சருக்குப் புகார் கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாகவும் ஜூப்ளி தமுலி தெரிவித்துள்ளார்.

Source: THE WIRE

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்