Aran Sei

‘பூட்டானில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்வோம்’ – அசாம் மாநில பாஜக அரசு

ண்டை நாடான பூட்டானில் இருந்து ஆக்ஸிஜனை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் பாஜகவை சேர்ந்த அசாம் சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

நேற்று (ஏப்ரல் 25), நல்பாரி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ஆக்சிஜன் தேவை குறித்த விஷயத்தில், நாங்கள் முன்னேற்பாட்டுடனேயே உள்ளோம். பூட்டான் நாட்டில் ஒரு புதிய ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆலையில் இருந்து, அசாம் மாநிலத்திற்கு ஆக்சிஜன் இறக்குமதி செய்வதற்கான ஏற்பாட்டை இன்று செய்திருக்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை ரத்து செய்யுங்கள் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்

நாகாலாந்து மாநிலம் திமாபூரில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலை குறித்து அசாம் மாநில அரசு இதுவரை அறிந்திடாமல் இருந்தது என்றும் இப்போது அந்த ஆலையில் இருந்து அசாமுக்கு ஆக்சிஜன் கொள்முதல் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம் என்றும்  ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

“எங்களிடம் ஒரு நல்ல செய்தி இருக்கிறது. உலகம் முழுவதும் ரெம்தேசிவிர் மருந்தை நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம். ஆனால், அசாமிலேயே ரெம்தேசிவிர் தயாரிக்கப்படுவது எனக்குத் தெரியாது. இன்று காலை பலாஸ்பரியில் உள்ள சன் மருந்து ஆலைக்குச் சென்ற போதுதான் தெரிந்துக்கொண்டேன், ​​அசாமில் ஒவ்வொரு வாரமும் 80,000 ரெம்தேசிவிர் மருந்துகள் தயாரிக்க முடியும் என்று.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source : PTI 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்