Aran Sei

நிலத்தில் இருந்து வெளியேற மறுத்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு – காவல்துறையோடு இணைந்து மக்களை தாக்கிய புகைப்பட கலைஞர் கைது

சாம் மாநிலம் தர்ராங் மாவட்டம் சிபஜ்கார் பகுதியில் வாழும் மக்களை மாநில அர வெளியேற்றுவதற்கு எதிராகப் போராடிய அப்பகுதி மக்கள்மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

மாநில அரசின் விவசாயத் திட்டத்திற்காகச் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ள்ளது.

மேலும், நூற்றுக்கணக்கானக் காவல்துறையினர் மரங்களுக்குப் பின்  ஒளிந்து கொண்டு, பல்வேறு திசைகளில் துப்பாக்கி சூடு நடத்தியது குறித்த காணொளியும் சமுகவலைதளங்களில் பரவியுள்ளது.

காவல்துறையின் இந்தத் தாக்குதல் நடவடிக்கையின் காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காவல்துறையினர் உட்பட 20 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும்,  இந்தச் சம்பவத்தைப் படம் பிடிக்க மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர்  பிஜய் சங்கர் பனியாவும்  காவல்துறையோடு இணைந்து சுடப்பட்ட ஒருவரை தாக்கியதன் காரணமாக காவல்துறையில்  செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “அசாம் மாநிலத்தில் மாநில அரசே ஊக்குவிக்கும் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது”  என்று கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்