Aran Sei

அசாம்: மதிய உணவுக்கு மாட்டிறைச்சியை எடுத்து சென்ற தலைமை ஆசிரியை – மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைது செய்த காவல்துறை

Credit: The Wire

சாமில் மதிய உணவிற்கு மாட்டிறைச்சி உணவை எடுத்து சென்றதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அசாமில் மாட்டிறைச்சிக்கு முழுமையாக தடை விதிக்கப்படவில்லை. ஆனால், 2021 ஆண்டில் கொண்டுவரப்பட்ட அசாம் கால்நடை பாதுகாப்பு மசோதா 2021 கீழ் இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்களின் கோவில்கள் அல்லது அவரக்ள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிக்கு ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம்: மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி 2 பழங்குடிகளைக் கொன்ற பசுக் காவலர்கள் – 9 பேர் கைது

2021 ஆண்டு அசாம் கால்நடைப் பாதுகாப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீட்டிற்குள் நுழைந்து, கடந்த ஆறு ஆண்டுகளில், ‘சட்டவிரோத கால்நடை வர்த்தகத்தில் இருந்து சம்பாதித்த பணத்தில்’ வாங்கிய சொத்துக்களை ஆய்வு, சோதனை, பறிமுதல் செய்ய காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது.

கோல்பூரின் லக்கிபூர் பகுதியில் உள்ள ஹர்கச்சுங்கி நடுநிலை ஆங்கிலப் பள்ளியின் தலைமை ஆசிரியராக தலீமா நெசா பணியாற்றி வருகிறார். மே 14 தேதி பள்ளியில் நடைபெற்ற விழாவின்போது மதிய உணவாக மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றுள்ளார்.

உத்தரபிரதேசம்: மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக கூறி வலதுசாரிகளால் தாக்கப்பட்ட இஸ்லாமியர்

இது தொடர்பாக பள்ளி மேலாண்மைக் குழு அளித்த புகாரின் அடிப்படையில், 56 வயதான தலீமா நெசாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மாட்டிறைச்சி உணவைப் பள்ளியின் ஊழியர்களுக்கு நெசா பரிமாறியது, அவர்களுக்கு அசௌகரியத்தை  ஏற்படுத்தியது. இரண்டு மத சமூகங்களையும் வருத்தமடையச் செய்தது என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர் – காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டதாக காவலர்கள் தகவல்

நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள நெசா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ (வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 295 ஏ (மத உணர்வுகளைத் தூண்டுவது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தின் சில பகுதிகளில் மாட்டிறைச்சியை தடை செய்யும் திட்டம் புதிது என்றாலும், 2016 ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு மாட்டிறைச்சிக்காக கைது நடைபெற்றிருப்பது இது முதல் முறையல்ல. 2017 ஆண்டு மாட்டிறைச்சியை வெளிப்படையாக எடுத்துச் சென்றதால் சிலரின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக ஜோர்ஹாட் பகுதியைச் சேர்ந்த மைனர் சிறுவன் உள்ளிட்ட மூன்று இஸ்லாமியர்களை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

Source: The Wire

Subramanian Swamy யை கேள்வி கேக்கும் தைரியம் Congress க்கு இருக்கா? Haseef | Congress Protest | BJP

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்