Aran Sei

அஸ்ஸாம் என்ஆர்சி: குடியுரிமை இழந்த 19 லட்சம் பேரில், 1000 பேருக்கு மட்டுமே மறுபரிசீலனை

ஸ்ஸாம் மாநிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC), 1,032 பதிவுகள் மட்டுமே சந்தேத்திற்கிடமானவை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது.

தி இந்து பத்திரிகை ஆர்டிஐ மூலம் கேட்ட  கேள்விக்கு பதில் அளித்துள்ள அஸ்ஸாம் மாநிலத்தின், தேசிய குடிமக்கள் பதிவேட்டின் ஒருங்கிணைப்பாளர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறுவதற்காக அஸ்ஸாம் மாநிலத்தில் பெறப்பட்ட 3.29 கோடி விண்ணப்பங்களில் 19 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அஸ்ஸாம் மாநிலத்திற்கான தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியல் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது.

நாடிழந்தவர்களாக அறிவிக்கப்பட்ட அந்த பட்டியலில், குறிப்பிடத்தகுந்த அளவு இந்துக்களும் இடம்பெற்றிருந்த நிலையில், அஸ்ஸாமை ஆளும் பாஜக அரசு அதை ஏற்க மறுத்தது. அதை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளது.

குடியுரிமை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான சான்றிதழை இந்த ஆண்டு மார்ச் (2021) மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பதிவுத்துறை அஸ்ஸாம் அரசுக்கு உத்தரவிட்டிருந்து.

இந்நிலையில், ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலில், குடியுரிமை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான சான்றிதழ் இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

1985 ஆம் ஆண்டு ஒன்றிய அரசுக்கும் அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கம், அனைத்து அஸ்ஸாம் கன சங்ராம் பரிஷித் ஆகிய அமைப்புகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அஸ்ஸாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெறியேற்றும் வகையில், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும் என்ற முடிவு செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின்படி தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்ட கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்