Aran Sei

அசாமில் மதரசாக்களை மூடும் மசோதா – எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே நிறைவேற்றம்

அஸ்ஸாமில் அரசு நடத்திவரும் மதராசாக்களை ஒழித்து பள்ளிகளாக மாற்றும் மசோதா எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 28-ம் தேதி, அஸ்ஸாமை ஆளும் பாஜக அரசு, மதரசாக்களை ஒழித்து பொதுப் பள்ளிகளாக மாற்றும் மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.

இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணிக் கட்சி, அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வாக்குகளை பிரிக்க ”மதரசாக்கள்” குறிவைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர் என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அஸ்ஸாமில் மதரசாக்களை மூட பாஜக திட்டம் – எதிர்ப்பிற்கிடையே மசோதா தாக்கல்

இந்த மசோதா தற்போது நடைமுறையில் இருக்கும் இரண்டு சட்டங்களை (அசாம் மதராசா கல்விச் சட்டம் 1995, அசாம் மதராசா கல்விச் சட்டம் 2018) ரத்து செய்கிறது.

முன்னதாக, அசாம் மாநில அரசால், சுமார் 610-க்கும் மேற்பட்ட மதரசாக்கள் நடத்தப்பட்டு வருவதாக கல்வித்துறை அமைச்சர் ஹேமந்தா பிஸ்வா ஷர்மா தெரிவித்திருந்தார்.  “இந்த மசோதா தனியார் மதராசாக்களைக் கட்டுப்படுத்துவதற்கும் ரத்து செய்வதற்கும் அல்ல,” என்றும் சர்மா கூறியிருந்தார்.

அனைத்து மதராசா நிறுவனங்களும் தொடக்கப்பள்ளியாகவும், உயர்நிலைப்பள்ளியாகவும், மேல்நிலைப்பள்ளியாகவும் மாற்றப்படும் என கூறியுள்ள அமைச்சர், மதராசாவில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதோருக்கும் அவர்களுடைய வேலை, ஊதியம், சலுகைகள் என அனைத்தும் சரியாக கிடைக்கும் என கூறியிருந்தார்.

‘மதரசாக்கள் பயங்கரவாதிகளின் பிறப்பிடம்’ – பாஜக அமைச்சர் சர்ச்சை கருத்து

இந்த மசோதா, 97 சமஸ்கிருத கற்றல் மையங்களையும் ஒருங்கிணைத்து, வரும் ஜனவரி 2022 முதல் அஸ்ஸாமில் உள்ள சமஸ்கிருத பல்கலை கழகத்தின் கீழ் இயங்கும் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையமாகவும் மாற்ற வழிவகை செய்துள்ளது என தி இந்து குறிப்பிட்டுள்ளது.

இரண்டு சதித் திட்டங்களும் ஒரு எரியூட்டலும் – அருந்ததி ராய்

அசாமில் இரண்டு வகையான அரசு நடத்தும் மதரசாக்கள் உள்ளன. அதில் 189 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் மதரசாக்கள் இடைநிலைக் கல்வி வாரியத்தாலும், உயர்நிலைக் கல்வி கவுன்சிலாலும் நடைப்பெற்று வருகிறது. மாநில அரசின் மதராசா கல்வி வாரியத்தின் கீழ் 542 மதரசாக்கள் மற்று அரபி கல்லூரிகளும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்