Aran Sei

தொடங்கியது 15வது அசாம் சட்டபேரவையின் முதல் கூட்டத்தொடர்: விரைவில் பசு பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்ய பாஜக அரசு திட்டம்

ட்டபேரவையின் டுத்தக்  கூட்டத்தொடரில், பசு பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்ய பாஜக தலைமையிலான அசாம் மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்று அம்மாநில ஆளுநர் ஜெக்தீஷ் குகி தெரிவித்துள்ளார்.

இன்று (மே 22), தொடங்கிய அசாம் மாநில சட்டபேரவை கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநர் ஜெக்தீஷ் குகி, “மக்கள் பசுவை தொழுகிறார்கள். அதை புனித விலங்காக கருதுகிறார்கள். அடுத்த சட்டபேரவை கூட்டத்தொடரில், பசு பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்ய, நம் மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியாக கூறிக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

“பசுவதை தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது” – அலகாபாத் உயர்நீதிமன்றம்

மேலும், “இது சட்டமாக்கப்படுவதன் வழியாக, எதிர்காலத்தில் அசாமில் இருந்து கால்நடைகள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு, முழுமையான தடையைக் கொண்டு வர முடியும். விலங்குகள் பாதுகாப்பில் இந்த அரசானது சகிப்புத்தன்மையை ஏற்றுக்கொள்ளாது. அசாமுக்கு வெளியே அவற்றை ஏற்றுமதி செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனையை அளிக்கும்.” என்று அவர் கூறியுள்ளார்.

Source; pti

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்