Aran Sei

சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கான முகாம்களை 45 நாட்களுக்குள் கட்டி முடிக்க வேண்டும் – அசாம் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சாம் மாநிலம் கோல்பாரா மாவட்டம், மேட்டியாவில் கட்டப்பட்டு வரும் சட்டவிரோதமானவர்களை தங்க வைக்கும் முகாம்களை 45 நாட்களுக்குள் கட்டி முடிக்க வேண்டும் என அசாம் அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தற்போது தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் 177 பேரையும் புதிய முகாமிற்கு மாற்ற வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதி கல்யாண ராய் சுரானா, ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு பிறகான 45 நாட்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்னேற்றங்கள்குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அசாம் மாநில உள்துறை செயலாளர் மற்றும் அரசியல் துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “கோல்பாராவில் உள்ள மேட்டியாவில் கட்டப்பட்டு வரும் சட்டவிரோதமான குடியேறியவர்களுக்கான முகாம் பணிகள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிவடைந்து விடும் என அரசு நம்புகிறது. இது தொடர்பாக உள்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடமிருந்து அறிக்கைகள் பெறப்பட்டிருந்தாலும், தடுப்பு மையத்தின் கட்டுமான பணிகளை ஒரு மாதத்திற்குள் முடிக்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மிகுந்த எச்சரிக்கையுடன் தடுப்பு காவல் மையத்தைக் கட்டி முடிக்கவும், தற்காலிக மையத்தில் இருப்பவர்களைப் புதிய மையத்திற்கு பாதுகாப்பாக மாற்றவும் அரசுக்கு ஆறு வாரங்கள் கால அவகாசம் தேவைப்படுகிறது” என கோரியுள்ளார்.

இந்த ஏற்ற நீதிபதி, வழக்கைச் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துத் தீர்ப்பளித்துள்ளார்.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்