Aran Sei

அசாமில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் 6 மாதம் நீட்டிப்பு – தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நடவடிக்கை

credits : the indian express

சாம் மாநிலத்தில், ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்றம், கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி, 1958 ஆம் ஆண்டு ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை [ Armed Forces (Special Powers) Act, AFSPA] இயற்றியது.

இந்தச் சட்டம் அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களின் “அமைதிக்குறைவான பகுதிகள்” என்று குறிப்பிடும் இடங்களில், இந்திய ஆயுத படைகளுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது.

மற்றொரு ஓவைசியாக உருமாறும் அஜ்மல் – அசாம் தேர்தல்

அதன்படி, பாதுகப்பு படையினர், பொது ஒழுங்கைப் பராமரிப்பதற்கு, தேடுதல் வேட்டை நடத்தவும், கைது செய்யவும், தேவையென்றால் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும் அனுமதியளிக்கிறது. பாதுகாப்பு படையினர் மீது வழக்கு பதிவி செய்யப்படுவதிலிருந்தும், ஒருவகையில் பாதுகாப்பையும் இந்த சட்டம் வழங்குகிறது.

`என்ஆர்சி புதுப்பிப்புப் பணி மேற்கொள்ளப்படும்’ – அசாம் நிதி அமைச்சர்

இந்நிலையில்,  ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அசாமின் ஆளுநர், மாநிலம் முழுவதுமே அமைதி குறைவான பகுதி என அறிவித்து, ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

அசாம் என்.ஆர்.சி தடுப்பு முகாம்களில் ரேஷன் பொருட்கள் நிறுத்தம்

இந்த நீட்டிப்புக்கு குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் கூறப்படாத நிலையில், அசாம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் பல்வேறு இடங்களில் இருந்து வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதால், நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என தி வயர் செய்தி கூறுகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய அகில் கோகோய் – பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

1990 ஆம் ஆண்டு முதல், அசாமில் நடைமுறையில் இருக்கும் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், மாநில அரசால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் இந்த கறுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி, மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் சமூக அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்