Aran Sei

‘அஸ்ஸாமில் கொரோனாவால் இறந்தவரின் உறவினர்களால் தாக்கப்பட்ட மருத்துவர்’ – மூவரை கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை

சாம் மாநிலம் கவுகாத்தியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் இறந்ததால் அவரது உறவினர்கள் சிகிச்சையளித்த மருத்துவரைத் தாக்கியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தக் தாக்குதல் தொடர்காக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘தவறான தகவல்களைக் கூறி மக்களைக் குழப்புகிறார் பாபா ராம்தேவ்’ – இந்திய மருத்துவ சங்கத்தினர் காவல்நிலையத்தில் புகார்

இதுகுறித்து தெரிவித்துள்ள ஹோஜை பகுதியின் காவல் கண்காணிப்பாளர் பாருன் புற்கயாசத்தா, கொரோனா சிகிச்சை மையத்தில் தொற்றால் மிகவும் மோசமடைந்திருந்த நோயாளி உயிரிழந்ததால், அதை அறிந்த நோயாளியின் உறவினர்கள் சிகிச்சையளித்த மருத்துவர்களைத் தாக்கியதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கறுப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான மருந்துகள், சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை – 8,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

இந்நிலையில், அங்கு விரைந்த காவல் துறையினர் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மூவரை கைது செய்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா,”முன்களப்பணியாளர்கள் மீதான இது போன்ற வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்