Aran Sei

‘இஸ்லாமியர்கள் தங்கள் மக்கள் தொகையை குறைத்தால், உங்கள் வறுமை நீங்கும்’ – பாஜகவைச் சேர்ந்த அசாம் முதலமைச்சர் பேச்சு

சிறுபான்மை சமூகத்தினர் தங்களின் வறுமையை போக்க, குடும்பத்தை சிறியதாக வைத்துக்கொள்ளுங்கள் என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

நேற்று (ஜூன் 10), செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “மக்கள் தொகை கட்டுப்பாட்டை ஊக்கப்படுத்த தனது அரசு நடவடிக்கை எடுக்கும். அனைத்து சமூகங்களின் வளர்ச்சிக்கும் எங்கள் அரசு துணை நிற்கும். ஆனால், அதற்கு நம் சமூகத்தில் இருந்து ஆதரவு தேவைப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

‘சொந்த கட்சியின் பணத்தையே திருடிய கேரள பாஜக; அவிழும் உண்மைகள் – ராஜீவ் ராமச்சந்திரன்

“வறுமையை அகற்ற, இஸ்லாமிய பெண்களுக்குக் கல்வியை கற்பிக்க வேண்டும். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும். பெண்களுக்குக் கல்வி கற்பிப்பதற்காக நாங்கள் இருக்கிறோம். ஆனால், உங்கள் மக்கள் தொகையை நீங்கள் கட்டுப்படுத்தாவிட்டால் உங்களின் வறுமை ஒருபோதும் உங்களிடமிருந்து நீங்காது.” என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா இஸ்லாமியர்களை நோக்கி கூறியுள்ளார்.

source; newindianexpress

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்