Aran Sei

தனது அரசின் தோல்விகளை மறைக்கவே மதரஸாவுக்கு எதிராக அசாம் முதல்வர் பேசுகிறார் – காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

னது அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்கவே மதரஸா பள்ளிக்கூடங்களுக்கு எதிராக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசி வருகிறார் என்று அசாம் மாநில காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

நடந்து முடிந்த அசாம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, அசாமில் அதிகரித்துள்ள வேலையின்மை, சட்டவிரோத குடியேற்றம், வெள்ளம் போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதாக பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதனை நிறைவேற்ற முடியாது என்பதால், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப மதரஸா இல்லாத அசாம் பற்றி முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகிறார் என்று அசாம் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பூபேன் குமார் போரா குற்றம் சாட்டியுள்ளார்.

‘மதரஸா’ என்ற வார்த்தையே ஒழிக்க வேண்டும்: இந்தியாவில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் இந்துக்கள்தான் – அசாம் முதல்வர் கருத்து

“மதரஸா என்ற வார்த்தை இருக்கும் வரையில் தாங்கள் மருத்துவராகவோ, பொறியாளர்களாகவோ வர வேண்டும் என்று குழந்தைகளால் நினைக்க முடியாது. இந்த விஷயம் அந்தக் குழந்தைகளுக்குத் தெரிய வந்தாலே போதும். அவர்களே மதரஸாக்களுக்கு செல்ல மாட்டோம் எனக் கூறி விடுவார்கள். உங்கள் (இஸ்லாமியர்கள்) குழந்தைகளுக்குக் குரானை போதியுங்கள். யாரும் அதைத் தடுக்கப் போவதில்லை. ஆனால் அதை உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

பள்ளிக்கூடங்களில் மதம் சார்ந்த படிப்புகளுக்கு இடம் கிடையாது. இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட பாடங்கள் மட்டுமே பள்ளிகளில் போதிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான், மாணவர்கள் மருத்துவராகவோ, பொறியாளராகவோ, அறிவியல் அறிஞராகவோ உருவாக முடியும். எனவே ‘மதரஸா’ என்ற வார்த்தையையே முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

மதரஸாக்களில் பயிலும் குழந்தைகள், குரானை எளிதில் மனப்பாடம் செய்யும் அளவுக்குத் திறமை வாய்ந்தவர்களாக இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அவர்களுக்கு ஒன்றினை கூறிக்கொள்கிறேன். இந்தியாவில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் இந்துக்கள்தான். இந்தியாவில் எவரும் இஸ்லாமியராக பிறப்பதில்லை. இந்துக்களாகவே பிறந்திருக்கிறார்கள். எனவே ஒரு இஸ்லாமிய குழந்தை திறமைசாலியாக இருந்தால், அதற்கு அக்குழந்தையின் இந்து பூர்வீகமே காரணம் என நான் கருதுகிறேன் என்று ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

Source : newindianexpress

Savukku Shankar Arrest ஆக வாய்ப்பே கிடையாது Piyush Manush Interview

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்