Aran Sei

அசாம் முதலமைச்சரை விமர்சித்த செய்தி ஊடகம் – வழக்குப்பதிவு செய்த காவல்துறை

சாம் மாநில முதலமைச்சர் மற்றும் அம்மாநில தகவல் மற்றும் மக்கள்  தொடர்புத்துறை அமைச்சரை விமர்சிக்கும் வகையில் செய்தி வெளியிட்ட சுயாதீன செய்தி நிறுவனத்தின் மீது அம்மாநில தகவல் மற்றும் பொது உறவுகள் துறை இயக்குனர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அம்மாநிலத்தில் இருந்து  ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்னை சிறப்பிக்கும் வகையில் அம்மாநில அரசால் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

source:தி வயர்

இந்த  பதாகைகளில் “அசாமின் பெருமை” என்று குறிப்பிட்டு லவ்லினாவின் படத்திற்கு பதிலாக மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் தகவல்/மக்கள் தொடர்பு அமைச்சர் பிஜுஷ் ஹசாரிகா ஆகியோரின் படங்கள் தனித்தனி பதாகைகளில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், இதை விமர்சிக்கும் வகையில் செய்தி வெளியிட்ட ‘தி கிராஸ் கரண்ட்’ அம்மாநில அரசு வழக்கு பதிந்துள்ளது.

இதனைதொடர்ந்து இது குறித்து செய்தியாக்கிய நிருபருக்கு காவல்துறை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, அந்தக் காணொளி  செய்திநிறுவனத்தின்  அனைத்து சமூக வலைதளத்திலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து  தெரிவித்துள்ள அந்த நிருபர், “அந்தக் காணொளி ‘தொழில்நுட்ப கோளாறு’ காரணமாக நீக்கப்பட்டுள்ளது. எனது பென்டிரைவைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்” என்றும் தெரிவித்துள்ளார்.

source: தி வயர்

தொடர்புடைய பதிவுகள்:

 

வந்தனா கட்டாரியா குடும்பத்தின் மீதான சாதிவெறி சம்பவங்கள்: காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

கூடங்குளம் அணுவுலை விரிவாக்கம் மேற்கொள்ளப்படக் கூடாது – பூவுலகின் நண்பர்கள், அணுவுலை எதிர்ப்புக் கூட்டமைப்பு ட்விட்டர் பிரச்சாரம் 

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்