Aran Sei

பத்திரிகையாளரை மிரட்டிய பாஜக அமைச்சர் – அசாம் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார்

சாம் மாநிலத்தில் பத்திரிகையாளரை மிரட்டியது தொடர்பாக அம்மாநில பாஜக அமைச்சர் மீது காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தின்போது பாஜக அமைச்சர் பிஜூஸ் ஹசாரிக்காவின் மனைவி பருகா கூறிய கருத்தைப் பத்திரிகையாளர் நசுருள் இஸ்லாம் செய்தியாக வெளியிட்டிருந்தார்.

குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் வகுக்க காலம் நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு

இதுகுறித்து பாஜக அமைச்சர் பிஜூஸ் ஹசாரிக்கா தொலைபேசி வாயிலாக பத்திரிகையாளர் நசுருள் இஸ்லாம்மை மிரட்டிய காணொளி இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் பிஜூஸ் ஹசாரிக்கா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

” குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது ” – உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. கோபால கௌடா

அசாம் மாநிலம் ஜாகிரோடு சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராகப் பிஜூஸ் ஹசாரிக்கா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

source: THE HINDU 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்