Aran Sei

அஸ்ஸாம் குடிமைப்பணி தேர்வில் மொழிப்பாடம் நீக்கம் – ஆர்எஸ்எஸ் திட்டம் என்று எதிர்கட்சிகள் விமர்சனம்

ஸ்ஸாம் மாநிலத்தில், மாநில குடிமைப்பணி தேர்வில் (State Civil Services Examinations), கட்டாய மொழிப்பாடத்தை நீக்குவதற்கு அம்மாநில பாஜக அரசு எடுத்துள்ள முடிவுக்கு, எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

ரைஜோர் தள், அஸ்ஸாம் ஜாட்டியா பரிஷத் ஆகிய எதிர்கட்சிகள் நடத்திய பத்திரியைளர் சந்திப்பில், ஆர்எஸ்எஸ் கருத்தியலைக் கொண்ட வெளி மாநிலத்தவர்களை நிர்வாகப் பணியில் அமர்த்துவதே இதன் நோக்கம் என்று குற்றம்சாட்டியுள்ளன.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ரைஜோர் தள் கட்சியின் தலைவர் அகில் கோகாய் “அமைச்சரவை எடுத்துள்ள இந்த முடிவு அஸ்ஸாம் மாநிலத்திற்கு அபாயகரமானது. ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட இந்து பேசுபவர்கள் மற்றும் வட இந்தியர்கள் அஸ்ஸாம் குடிமைப்பணி தேர்வுகளில் கலந்துகொள்ள இது வழிவகுக்கும். இதுபோன்ற நபர்களை நிர்வாகத்தில் கொண்டுவருவதே பாஜக அரசின் நோக்கம்” என்று கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் மஜூலி என்ற இடத்தில் உள்ள பள்ளியில், அஸ்ஸாமி மொழி தெரியாத பீகார் மாநிலத்தை சேர்ந்தவரை, பாஜக அரசு ஆசிரியராக நியமித்ததை அகில் கோகாய் சுட்டிக்காட்டியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் ஜாட்டியா பரிஷத் கட்சியின் தலைவர் லுரின்ஜோதி கோகாய் “அரசின் இந்த முடிவு தன்னைத் தானே அழித்துக்கொள்வதற்கு சமம். இந்த அரசுதான் அஸ்ஸாமி மொழி கட்டாயப் பாடமாக்கப்படும் என்று கூறியது” என்பதை சுட்டிக்காட்டியதாக தி இந்து கூறுகிறது.

கடந்த புதன்கிழமையன்று அஸ்ஸாம் குடிமைப்பணி தேர்வில் மொழிப்பாடம் கட்டாயம் இல்லை என்றும் அஸ்ஸாமில் நிரந்தரமாக வசிக்கும், அஸ்ஸாமி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு மொழியை சரளமாக பேசக்கூடிய, மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் இந்த தேர்வை எழுத தகுதியானர்கள் என்றும் அஸ்ஸாம் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டதாக தி இந்து தெரிவித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்