Aran Sei

பாஜகவின் இஸ்லாமிய வேட்பாளர்களைக் கைவிட்ட அசாம் வாக்காளர்கள் – சிறுபான்மையினர் பிரிவைக் கலைப்பதாக பாஜக அறிவிப்பு

சாம் சட்டபேரவைத் தேர்தலில் தனது கூட்டணியின் இஸ்லாமிய வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறாததால், அம்மாநில பாஜக சிறுபான்மையினர் பிரிவைக் கலைப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

126 தொகுதிகளைக் கொண்ட அசாம் சட்டபேரவையில், பாஜக வென்ற 60 தொகுதிகளைச் சேர்த்து அதன் கூட்டணி 75 தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

நேற்று (மே 5), பாஜகவின் அசாம் மாநில தலைவர் ரஞ்சித் தாஸ் பிறப்பித்த உத்தரவில், கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு கலைக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அசாமில் பூர்வகுடி இஸ்லாமியர்களை கணக்கெடுக்கும் பணி – இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது

அசாமில் 31-லிருந்து 34 தொகுதிகள் இஸ்லாமியர்களை அதிகம் கொண்ட தொகுதிகளாக உள்ளன. அதில், 2016 ஆம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தலில், ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. வெற்றிப் பெற்ற அமினுல் ஹக் லஸ்கருக்கு, சட்டபேரவை துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது.

இந்த முறை, லஸ்கரை சேர்த்து, ஒன்பது இஸ்லாமிய வேட்பாளர்களைப் பாஜக களமிறக்கியது. ஆனால், இவர்கள் அனைவரும் தோல்வியுற்றனர்.

துணை சபாநாயகரான லஸ்கர், காங்கிரஸ் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் கரீம் உடின் பார்புயாவிடம் 19,654 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

தினமும் இந்து/இஸ்லாமியர் எனும் விவாதத்தை வளர்க்கும் மோடி: நோட்டீஸ் அனுப்புமா தேர்தல் ஆணையம்? – மம்தா கேள்வி

இந்த ஆண்டு, அசாம் சட்டசபையில் சுமார் 24 சதவீத இஸ்லாமிய உறுப்பினர்கள் இடம் பெறவுள்ளனர். மொத்தம் உள்ள 31 இஸ்லாமிய உறுப்பினர்களில், 16 பேர் காங்கிரஸ் சார்பிலும், 15 பேர் அதன் கூட்டணி கட்சிகள் சார்பிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Source : NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்