Aran Sei

வாக்களித்த மக்களை ஏமாற்றும் மக்கள் பிரதிநிதிகள் – மோசடி வழக்கு தொடர உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு செயற்பாட்டாளர் கடிதம்

வாக்களித்த மக்களை ஏமாற்றும் மக்கள் பிரதிநிதிகள்மீது ஏன் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420ன் கீழ் ஏன் வழக்க பதிய முடியாது என கேட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவிற்கு அசாம் மாநிலத்தின் குடும்ப சுரக்‌ஷா திட்டத்தின் செயல்பாட்டாளர் சத்ய ரஞ்சன் போரா கடிதம் எழுதியுள்ளார்.

மக்களால் தேர்தெடுத்தப் பிரதிநிதிகள், கட்சி மாறுவதன் மூலம் மக்களை ஏமாற்றுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வு சமத்துவத்துக்கும் சமூக நீதிக்கும் எதிரானது என்பதற்கு ஏ.கே.ராஜன் குழுவின் புள்ளிவிவரமே போதுமானது’ – கமல்ஹாசன்

”மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் பஞ்சாயத்து, நகராட்சி, சட்டப்பேரவை, மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தலில் கூட வெற்றி பெற்ற பிறகு அவர்கள் தங்கள் கட்சியை மாற்றிக் கொள்கிறார்கள்” என போரா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

”ஒரு தனிநபர் ஏமாற்றிய அல்லது தவறாக வழிநடத்திய எந்தவொரு நபர்மீது 420 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும். அதே போன்று ஒரு தனிநபரை அல்லாமல் நாட்டு மக்கள் ஏமாற்றுவதோடு, ஜனநாயகத்தை அவமதிப்பவர்கள் மீது வழக்கு பதிய வாய்ப்பு வழங்க வேண்டும்” என அவர் கோரியுள்ளார்.

உ.பி.யில் 8 வயது தலித் சிறுமி கொலை – பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு

”தங்களுக்கு விருப்பமான கட்சியில் சேர அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், வாக்களித்த மக்களுக்குத் துரோகம் செய்வது, நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை அவமதிப்பதற்கு ஒப்பாகும்.” என அவர் கூறியுள்ளார்.

”தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து நான்கு ஆண்டுகளுக்குக் கட்சி மாறுவதற்கு தடை மற்றும் கட்சிய மாறியபிறகு பத்து ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட தடை போன்ற சில கட்டுப்பாடுகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விதிக்க வேண்டும்.” என சத்ய ரஞ்சன் போரா கோரியுள்ளார்.

திருவாரூர் மத்தியப் பல்கலைகழக தமிழ்த்துறையில் சமஸ்கிருத ஆசிரியர் – தமிழ்த்துறையில் சமஸ்கிருத திணிப்பா?

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 51(A)ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் கடமையின்படி, நாட்டின் நியாயமூர்த்தியான அவர் என கோரிக்கைகளைப் பரிசீலிப்பார் என்று நம்புவதாக போரா தெரிவித்துள்ளார்.

”வாக்காளர்களின் தேர்வு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக நீங்கள் இதில் தலையிடுவீர்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பீமாகோரேகான் வழக்கு – ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவுலாகா பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம்

கடந்த மே மாதம் மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ருப்ஜோதி குர்மி, சுசாந்தா போர்கோஹெய்ன் மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் சட்டமன்ற உறுப்பினர் பணிதார் தாலுக்தார் ஆகியோர் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Source : The Hindu

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்