Aran Sei

காங்கிரஸ் வெற்றி பெற்றால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மட்டோம் – ராகுல் காந்தி

credits : pti

சாம் உடன்படிக்கை பிரச்சனை மூலமாக அம்மாநிலத்தை பிரிக்க பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் திட்டமிட்டிருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

அசாமில் வருகின்ற ஏப்ரல் மாதம், சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் கட்சி நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக் கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ”இந்த மாநிலத்தின் மக்களின் குரல்களை கேட்டு முடிவெடுக்கும் சுயமான முதலமைச்சர் தேவை. நாக்பூர் (ஆர்எஸ்எஸ்) மற்று டெல்லியின் குரலை கேட்டு முடிவெடுக்கும் முதலமைச்சர் தேவையில்லை” என தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், ”ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஒரு தொலைக்காட்சி இயக்கப்படலாம், முதல்வர் அல்ல. தற்போதைய அசாம் முதல்வர், நாக்பூர் மற்றும் டெல்லியின் சொல்படி நடக்கிறார் . அசாமுக்கு மீண்டும் இது போன்ற ஒரு முதல்வர் கிடைத்தால், அது மக்களுக்கு பயனளிக்காது. இளைஞர்களுக்கு தங்களுக்கும் வேலை கொடுக்கும் முதல்வர் தேவை” என்று அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகாலாந்து – கைநழுவிப் போகும் அமைதி உடன்படிக்கை, தீர்வு என்ன?

”இந்த மாநிலத்திற்கு அமைதியையும், பாதுகாப்பையும் அசாம் உடன்படிக்கை வழங்குகிறது. நானும் என் கட்சி தொண்டர்களும் அசாம் உடன்படிக்கையில் உள்ள அனைத்து கொள்கைகளையும் பாதுகாப்போம். அசாம் உடன்படிக்கையில் உள்ள கொள்கையிலிருந்து விலக மாட்டோம்” என அவர் உறுதியளித்துள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய அகில் கோகோய் – பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

சட்டவிரோத குடியேற்றம் என்பது, அசாமில் உள்ள முக்கியமான பிரச்சினை என கூறிய ராகுல் காந்தி, அந்த பிரச்சனையை பேச்சுவார்த்தையின் மூலம் அம்மாநில மக்கள் தீர்த்து கொள்வார்கள் எனும் நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அசாம் என்.ஆர்.சி தடுப்பு முகாம்களில் ரேஷன் பொருட்கள் நிறுத்தம்

”அசாம் உடன்படிக்கை பிரச்சனை மூலமாக, மாநிலத்தை பிரிக்க பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் திட்டமிட்டிருக்கிறது.அசாம் பிரிக்கப்பட்டால் இந்திய பிரதமர் மோடிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அசாமின் மக்களுக்கும், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அது மிகப் பெரிய பாதிப்பு” என ராகுல் காந்தி கூறியுள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

`என்ஆர்சி புதுப்பிப்புப் பணி மேற்கொள்ளப்படும்’ – அசாம் நிதி அமைச்சர்

மேலும், அசாமில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால், குடியுரிமை திருத்தச் சட்டம் எந்தச் சூழ்நிலையிலும் அமல்படுத்தப்படாது என அவர் உறுதியளித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்