ஆக்சிஜன் சிலிண்டர் தேவை என்று பாஜக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்ஸ் ராஜ் ட்வீட்டரில் பதிவிட்டதற்கு தேசிய இளைஞர் காங்கிரசின் தலைவர் ஸ்ரீநிவாஸ் உடனடியாக உதவியுள்ளார்.
இதுகுறித்து பத்திரிகையாளர் அஸ்மிதா பக்ஷி வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவிற்கு வாருங்கள், இங்கே ஆளும் கட்சியைச் சார்ந்த நாடளுமன்ற உறுப்பினர் சிலிண்டர் வேண்டி ட்விட்டரில் பதிவிடுகின்றார். அதற்கு எதிர்க்கட்சியின் இளைஞர் பிரிவு ஏற்படுத்தித் தந்து உதவுகிறது” என்றும் பதிவிட்டுள்ளார்.
வடமேற்கு டெல்லி பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜக கட்சியைச் சேர்ந்தவருமான ஹான்ஸ் ராஜ், டெல்லியில் உள்ள ஒருவருக்கு ஆக்சிஜன் வேண்டிப் பதிவிட்டுள்ளார்.
Welcome to India. Where a sitting MP from the ruling party is tweeting requests for oxygen and a the youth wing of the opposition party is working to get it arranged. pic.twitter.com/DstXFy7H2x
— Asmita Bakshi (@asmitabee) May 3, 2021
இந்நிலையில், இந்தப் பதிவிற்கு பதிலளித்துள்ள தேசிய இளைஞர் காங்கிரசின் தலைவர் ஸ்ரீநிவாஸ் உடனடியாக உதவியுள்ளார்.
டெல்லியில் கடுமையான ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனையில் படுக்கைகள் தட்டுப்பாடு நிலவுவது கவனிக்கத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.