Aran Sei

பெகசிஸ் தொடர்பாக சுயாதீன விசாரணை கோரிய எதிர்க்கட்சிகள்: மறுத்த ஒன்றிய அரசு

பெகசிஸ் ஸ்பைவேர் கொண்டு வேவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சுயாதீன விசாரணை என்ற கோரிக்கையை ஏற்க முடியாது, அது ‘இந்திய ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் முயற்சி’ என ஒன்றிய அரசின் தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓவின் தயாரிப்பாக பெகசிஸ் ஸ்பைவேர் பயன்படுத்தி அரசியல் தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர், அமைச்சர்கள், நீதிபதிகள் ஆகியோர் வேவு பார்க்கப்பட்டது தொடர்பாக சுயாதீன விசாரணை கோரி எதிர்கட்சி மாநிலங்களவை எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

கோடீஸ்வரர்களின் விண்வெளி சுற்றுப்பயணம் – முதலாளித்துவ வீழ்ச்சியின் அடையாளம்

வேவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியல் என கசித்த தகவல்கள்குறித்து அம்னெஸ்டி இண்டர்நேஷனல் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லாபநோக்கமற்ற ஊடக நிறுவனமான பர்பிட்டன் ஸ்டோரிஸ் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவுகள் இந்தியாவின் தி வயர் இணையதளம் உள்ளிட்ட உலகின் 17 ஊடகங்களுடன் பகிரப்பட்டு வருகிறது.

ஜூலை 18 முதல் ஊடகங்களில் வெளியான செய்திகளை அடிப்படையாக கொண்டு இது தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சி நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுப்பி வருகின்றன.

‘இது நம்ம காலம்’ – ‘சார்பட்டா பரம்பரை’ பேசும் அரசியல் என்ன?

இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய எழுந்த ஒன்றிய தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ”ஜூலை 18 ஆம் தேதி பரபரப்பான செய்தி ஒன்றை ஒரு இணைய ஊடகம் வெளியிட்டது. அது கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள்குறித்து விரிவாக அறிக்கை தாக்கல் செய்யபப்ட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.

அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்திருக்கும் அறிக்கையில், “கடந்த காலத்தில், பெகசிஸ் பயன்படுத்தி வாட்சப் மென்பொருளில் வேவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அதில் எந்தக் குற்றச்சாட்டுகளில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை, என உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மறுத்துவிட்டனர்.” என கூறினார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60% அளவிற்கு கடன் – மாநிலங்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் தகவல்

ஜூலை 18 ஆம் தேதி பத்திரிக்கைகளில் வெளியான செய்திகள், ‘இந்திய ஜனநாயகம் மற்றும் அதன் நிறுவப்பட்ட நிறுவனங்களை இழிவுபடுத்து முயற்சி’ என குறிப்பிட்டுள்ளார்.

செய்தியை விரிவாக படிக்காதவர்களை குறை சொல்ல முடியாது என குறிப்பிட்டுள்ள வைஷ்ணவ், தர்க்க ரீதியில் உண்மையை ஆராயுமாறு கேட்டுக் கொண்டார்.

கியாம்பூ காடுகளும் ஜிம் கார்பெட்டின் பேத்தியும் – நில உரிமைக்காக கொல்லப்பட்ட போராளி

”தொலைபேசி எண் இருப்பதால் மட்டும் அவர்கள் சாதனம் வேவு பார்க்கப்பட்டது அல்லது ஹேக் செய்ய முயற்சிக்கப்பட்டது எனக் கூறுவது தவறு. தொழில்நுட்ப பகுப்பாய்வு உட்படுத்தாமல் தொலைபேசி சாதனம் ஹேக் செய்யப்பட்டதா அல்லது முயற்சி செய்யப்பட்டதா என கூற முடியாது.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்