Aran Sei

‘கொரோனாவிற்கு எதிராக போராடும் என் குடும்பத்திற்கு துணை நிற்க வேண்டும்’ – ஐபிஎல்லில் இருந்து விலகுகிறார் அஷ்வின்

கொரோனாவிற்கு எதிராக போராடும் என் குடும்பத்திற்கு துணை நிற்க வேண்டும் என்பதால், ஐபிஎல் தொடரில் இருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என்று கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஷ்வின் அறிவித்துள்ளார்.

இன்று (ஏப்ரல் 26), தனது ட்விட்டர் பக்கத்தில், “நாளை (ஏப்ரல் 27) முதல் இவ்வாண்டிற்கான ஐபிஎல் தொடரில் இருந்து ஒரு இடைவேளையை எடுத்துக் கொள்ளவுள்ளேன். என் குடும்பமும், சொந்தங்களும் கொரோனாவிற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த இக்காட்டான சூழலில் நான் அவர்களுடன் துணை நிற்க வேண்டும்.” என்று ரவிசந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிலைமை சீராகும் பட்சத்தில், நான் மீண்டும் அணிக்கு திரும்பி விளையாடுவேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஷ்வின், இந்திய அணிக்காகவும் தற்போதைய ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்