பேராசிரியர் பிரதாப் பானு மேத்தா ராஜினாமா செய்த பின்னணியில் உள்ள அழுத்தங்களைப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு, அறங்காவலர்களின் அதிகாரங்களைப் பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் கைமாற்றிவிட வேண்டும் என்று அசோகா பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
பேராசிரியர்கள் மேத்தா, அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோர் வெளியேறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 22, 23 ஆகிய தேதிகளில் வகுப்புகள் புறக்கணிப்பை மேற்கொள்ள மாணவர்கள் முடிவு செய்திருப்பதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கள் கோரிக்கைகள் செவ்வாய்க்கிழமைக்குள்(மார்ச் 23) நிறைவேற்றப்படாவிட்டால் துணைவேந்தர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தித் தனி இயக்கம் ஒன்றை நடத்தஉள்ளோம் என மாணவர் சங்கத்தினர்இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘கலவரம் செய்யும் துரியோதனனும் துச்சாதனனும் நமக்கு வேண்டாம்’ – பாஜகவை விமர்சித்த மம்தா பானர்ஜி
“நாங்கள் ஆழமாக மதிக்கும் அறிவார்ந்த கல்வியாளர்களை இழந்தது மட்டுமல்லாமல், இந்தப் பல்கலைக்கழகத்திற்குள் உள்ள மாணவர்களை வெளி அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கப்படும் என்ற நிர்வாகத்தின் மீது மாணவர்கள் வைத்த நம்பிக்கையை துணை வேந்தர் மாலபிகா சர்கார், வேந்தர் ருத்ரங்ஷு முகர்ஜி, மற்றும் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்கள் காப்பாற்ற தவறிவிட்டனர். இது கல்வி சுதந்திரத்தை அப்பட்டமாக மீறுவதாகும், இதை வன்மையாக கண்டிக்கிறோம்.” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாக, தி இந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ், ஹார்வர்ட், யேல் மற்றும் கொலம்பியா உட்பட உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களை சேர்ந்த170 க்கும் மேற்பட்ட மூத்த கல்வியாளர்கள் பேராசிரியர் மேத்தாவிற்கு ஆதரவாக ஒரு பகிரங்கக் கடிதத்ததை எழுதியுள்ளனர், அதில் அரசியல் அழுத்தத்தின் கீழ் காரணமாக பதவி விலகிய அவருக்குத் தங்கள் துயரத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை மீது வழக்கு பதிவு செய்த கேரள காவல்துறை: சட்டம் தன் கடமையைச் செய்யும் – பினராயி விஜயன்
“தற்போதைய இந்திய அரசாங்கத்தின் முக்கிய விமர்சகராக, கல்வி சுதந்திரத்தைப் பாதுகாப்பவராக இருந்த அவர், அவரது எழுத்துக்களுக்காக குறிவைக்கப் பட்டுள்ளார். அசோகாவின் அறங்காவலர்கள், அவருக்குப் பாதுகாப்பாக இருந்திருக்க வேண்டும், மாறாக அவர் பதவி விலக கட்டாயப்படுத்தியது போல் தோன்றுகிறது” அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக தி இந்து கூறியுள்ளது.
“பொது உரையின் உள்ளடக்கத்திற்காக ஒரு அறிஞர் தண்டிக்கப்படும் போதெல்லாம் அறிநெறி மதிப்புகள் தாக்குதலுக்குள்ளாகிறது. இந்த மதிப்புகளைப் பாதுகாக்கும் வகையில் அந்த உரை இருக்கும்போது, தாக்குதல்கல் வெட்கக்கேடானது” என அந்தக் கடிதம் கூறுவதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.