Aran Sei

மத்திய அரசை விமர்சித்த பேராசிரியர் ராஜினாமா – நெருக்கடி தான் காரணமா?

மோடி அரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாக விமர்சித்து வந்த அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் அரசியல் விமர்சகருமான பிரதாப் பானு மேத்தா தனது ராஜினாமா செய்துள்ளார்.

பிரதாப் பாணு மேத்தாவின் அரசியல் கருத்துக்களும் எழுத்தக்களும் தான் இந்த ராஜினாமாவிற்கு காரணமா என்ற கேள்விக்கு அசோகா பல்கலைக்கழகச் செய்தி தொடர்பாளர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.அவரின் ராஜினாமா தொடர்பாகப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அசோகா பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும், பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்தில்,  பல்கலைக்கழகத்திற்கு பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு அசோகா பல்கலைக்கழகம் வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்கிறது ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது ராஜினாமா குறித்து கருத்து தெரிவிக்க பிரதாப் பாணு மேத்தாவும் மறுத்துவிட்டார்.

பெண்ணின் விருப்பமின்றி பாலுறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமையே – டெல்லி நீதிமன்றம் உத்தரவு

மத்திய அரசின் கொள்கை ஆராய்ச்சி  மையத் தலைவர், என்.ஒய்.யூ சட்டப்பள்ளி பேராசிரியர், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்த மேத்தா, 2017 ஆம் ஆண்டு அசோகா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கட்டார்.

இரண்டு ஆண்டுகள் துணைவேந்தராக இருந்த அவர், 2019 ஆம் ஆண்டு தனது துணைவேந்தர் பதவியை ராஜினாமா செய்து, பேராசிரியாக மட்டும் தொடர்ந்தார். அப்போது மாணவர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “முழுநேர கல்வி வாழ்க்கைக்கு திரும்புவதாக” கூறியிருந்தார்.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்