Aran Sei

‘வன்முறை பேச்சுகள் இனப்படுகொலையின் முன்னோட்டம்’- ராஜஸ்தான் முதலமைச்சர் எச்சரிக்கை

ரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியின் போது சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியவர்களை இதுவரை கைது செய்யாதது வெட்கக்கேடானது என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லட் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சி, ஜூனா அகாடாவைச் சேர்ந்த யதி நரசிம்மானந்த் கிரி என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்மீது ஏற்கனவே இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்களை பேசியதற்காகவும் வன்முறையைத் தூண்டியதற்காகவும் காவல்துறையின் கண்காணிப்பில் உள்ளார்.

இஸ்லாமியர்களைக் கொல்ல அழைப்பு விடுத்த இந்துத்துவவாதிகள் – உபா சட்டத்தில் கைது செய்ய காவல்துறை மறுப்பு

இந்நிலையில், அசோக் கெஹ்லட் தனது டிவிட்டர் பக்கத்தில், அந்நிகழ்வில் ஆத்திரமூட்டும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசியதற்கான ஆதாரமாக காணொளிகள் இருந்தாலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது வெட்கக்கேடானது என்று கூறியுள்ளார்.

இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் மௌனம் காக்கின்றனர் என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“நம் நாட்டில் உள்ள சில அடக்கமுடியாத சக்திகள் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் கொலைச் செய்யப்போவதாக பேசுகிறார்கள். ஆனால் அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் காட்டு ராஜ்ஜியம் நடந்துக்கொண்டிருப்பதாக தெரிகிறது. உலகில் எங்கெல்லாம் இனப்படுகொலை நடந்ததோ, அங்கெல்லாம் முன்னர் இதேபோன்ற வன்முறை பேச்சுகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல்தான் இருந்தது” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா இன்னும் ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறதா? – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி

மேலும், “இதுபோன்ற வன்முறையாளர்கள் ஒரு மதத்தின் பிரதிநிதிகளாக இருக்க முடியுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். இக்குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் அரசுக்கு, ஆட்சியில் தொடர உரிமை உள்ளதா?” என்று  அசோக் கெஹ்லட் கேள்வி எழுப்பியுள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்