Aran Sei

‘இலவசமாக தடுப்பு மருந்தை பெறுவது ஒவ்வொரு இந்தியரின் உரிமை’ – அனைவரும் குரல் எழுப்ப ராஜஸ்தான் முதல்வர் அழைப்பு

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திறமையின்மை மற்றும் உணர்வற்ற தன்மைக்கு எதிராகவும், அனைவரும் இலவசமாக தடுப்பு மருந்தை செலுத்த வலியுறுத்தியும் நாம் அனைவரும் இணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜஸ்தான் முதல்வர் அசோக்  கெஹ்லாட் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து, இன்று (ஜூன் 2), தனது ட்விட்டர் பக்கத்தில் அசோக்  கெஹ்லாட், “இலவசமாக தடுப்பு மருந்தை பெறுவது ஒவ்வொரு இந்திய குடிமகனின் உரிமையாகும். முந்தைய அனைத்து ஒன்றிய அரசுகளும் இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளன. இப்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில் சுகாதார நெருக்கடியில் நாடு சிக்கிக்கொண்டிருக்கும்போது, ​​அனைவருக்கும் தடுப்பு மருந்து வழங்க மறுப்பது முற்றிலும் அநியாயமான செயலாகும்.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்த திறமையின்மை மற்றும் உணர்வற்ற தன்மைக்கு எதிராகவும் அனைவரும் இலவசமாக தடுப்பு மருந்தைச் செலுத்த வலியுறுத்தியும் நாம் அனைவரும் இணைந்து குரல் எழுப்ப வேண்டும். வாருங்கள், விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் இந்த முயற்சியில் எங்களுடன் இணையுங்கள்.” என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக்  கெஹ்லாட் அழைப்பு விடுத்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்