கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஆஷா பணியாளர்களுக்கு அரசு போதிய உதவிகள் வழங்காததைக் கண்டித்து வரும் மே 24 அன்று நாடுதழுவிய போரட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அனைத்திந்திய திட்டப்பணியாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவில் பலமான கட்டமைப்பு உள்ளது” : ஐ.நா சபையின் உதவியை நிராகரித்த இந்தியா
ஆஷா பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக ஒன்றிய அரசு அறிவித்த போதும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்றும் , போதிய ஊதியம் அளிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
மேலும், “ஆஷா தொழிலாளர்களின் உறவினர்களுக்காக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை கூட பெயரளவில் காகிதத்தில் தான் உள்ளது. பல்வேறு மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட உதவிகளும் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளனர்.
சாக்கடையை சுத்தம் செய்ய நிர்பந்திக்கப்பட்ட தொழிலாளர் – மனம் உடைந்து தற்கொலை
இதுகுறித்து தெரிவித்துள்ள அனைத்திந்திய திட்டப்பணியாளர்கள் கூட்டமைப்பினர், ஆஷா பணியாளர்களுக்கு பி.பி.இ உடை உட்பட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால் பலர் கொரோனா தோற்று ஆளாகியுள்ளதாகவும், சிலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரயில்வே துப்புரவுத் தொழிலாளர்களை முழுநேர ஊழியர்களாக அறிவித்திடுக – வைகோ
மேலும்,”நாடுமுழுதும் பணிபுரியும் ஆஷா பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு அரசு 5000 ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்க வேண்டும். அதுமட்டுமல்லது, 25,000ரூபாய் மருத்துவ இழப்பீடாக வழங்க வேண்டும். முகக்கவசம், கையுறை, பி.பி.இ உடை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா தொற்று முதல் அலையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் காப்பீட்டை வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.