Aran Sei

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம்- சமூக செயல்பாட்டாளர்கள் அழைப்பு

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நேற்று (ஏப்ரல் 26) முதல் மின் கட்டணம், விவசாயக் கடன் ஆகியவற்றை செலுத்தாமலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமலும் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடுமாறு, அந்நாட்டின் சமூக செயல்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மியான்மரில் கடந்த பிப்ரவரி 1 அன்று ஆட்சியை கைப்பற்றிய ராணுவம், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியின் தலைவர் ஆங் சான் சூ கி மற்றும் அவரது கட்சியினரை தடுப்புக் காவலில் வைத்ததில் இருந்து அந்நாட்டில் குழப்பம் நிலவி வருகிறது.

மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்

இந்நிலையில், ராணுவ ஆட்சிக்கு பின் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு முடிவு கட்டுவது தொடர்பாக, இந்தோனேசியாவில் நடைபெறும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் மாநாட்டில், சனிக்கிழமை அன்று மியான்மர் ராணுவத்தின் மூத்த அதிகாரி மின் ஆங் ஹளைங், ஒப்பந்தம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

ராணுவத்தின் மூத்த அதிகாரி சமர்ப்பித்த அந்த அறிக்கையில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசின் பிரதிநிதிகளை விடுவிப்பது குறித்தோ, ஆங் சுங் சுகியை விடுதலை செய்வது குறித்தோ குறிப்பிடப்படவில்லை என்றும், நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்

இதைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல், அந்நாட்டின் பலநகரங்களில் மக்கள் திரளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.

மேலும், இதுவரை 751 பேர் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளதாக சமூக செயல்பட்டாளர்கள் கண்காணிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பு – ஆளும் கட்சித் தலைவர்களை கைது செய்த இராணுவம்

மியான்மர் மக்களின் ஒத்துழையாமை இயக்கத்தின் விளைவாக, “நாட்டின் பொருளாதாரம் படுபாதாளத்திற்கு சென்று பசியோடு இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்று பன்னாட்டு அமைப்புகள், கருத்து தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் குறித்து தெரிவித்துள்ள சமூக செயல்பாட்டாளர் காண்ட் வை பியோ, “மியான்மரின் எல்லா பகுதிகளிலும் ராணுவ ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை போராட்டத்தை நடத்த முயற்சித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்