Aran Sei

“ஒருவரின் வாழ்க்கை முறை பிறர் நம்பிக்கையை எப்படி புண்படுத்தும்?” – இறைச்சி கடைகள் மூடுவது குறித்து ஒவைசி கேள்வி

Asaduddin-Owaisi-TW-1579431006

வ்வொரு செவ்வாய்கிழமையும் இறைச்சி கடைகள் மூடப்படும் என குர்கான் மாநகராட்சி எடுத்து முடிவைக் கண்டித்துள்ள அசாதுதீன் ஒவைசி, ”ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை முறை, எப்படி ஒருவரின் நம்பிக்கையைப் புண்படுத்துகிறது?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்

நேற்றைய தினம், குர்கான் மாநகராட்சியின் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் குர்கான் மாநகராட்சியின் 19 ஆம் வார்டு கவுன்சிலரான அஷ்வானி ஷர்மா, வாரம் ஒரு முறை இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டும் என்ற கருத்தைக் கூட்டத்தில் முன்மொழிந்துள்ளார்.

அதை விவாதித்த உறுப்பினர்கள்அனைவரும், ஒரு மனதாக ஞாயிற்றுக்கிழமை (வியாபாரம் அதிகம் இருக்கும் நாள்) தவிர வார நாட்களில் ஒரு நாள் இறைச்சி  கடைகள் மூடலாம் என முடிவெடுத்தனர்.

இரட்டை வேடும் போடும் திரிணாமூல் காங்கிரஸ் – அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம்

இந்துக்களுக்குடைய புனித நாளான செவ்வாய்கிழமையன்று இறைச்சி கடைகளை மூடலாம் என பல உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதற்குப் பதிலளித்த குர்கான் மாநகராட்சியின் ஆணையர், வினய் பிரதாப் சிங், ”அசைவ உணவு சாப்பிடுவது ஒருவருடைய தனிப்பட்ட உரிமை. எனவே ஒரு மாநகரத்துக்கே முடிவெடுக்கும் அவையினர், கவனமாக முடிவெடுக்க வேண்டும்” என கூறியுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மசூதியைச் சேதப்படுத்திய இந்து அமைப்பினர் : ‘தவறாக வழிநடத்தப்பட்ட மனிதர்களை சரி செய்யுங்கள்’ – அசாதுதீன் ஓவைசி

குர்கான் மாநகராட்சியின் 18 ஆம் வார்டு கவுன்சிலரான, சுபாஷ் சிங்காலா, ”ஞாயிற்றுக்கிழமை இறைச்சி கடைகளை மூட முடியாது என்பதால், இந்துக்களின் உணர்வுகளை மதித்து செவ்வாயன்று இறைச்சி கடைகளை மூடலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள்தொகை பதிவேட்டை எதிர்த்துப் போராட தயார் – அசாதுதீன் ஓவைசி

சுபாஷ் சிங்காலாவின் கருத்துக்கு, மாநகராட்சியின் மேயர் மது ஆசாத் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததையடுத்து, குர்கான் மாநகராட்சியில் செவ்வாய்கிழமையன்று இறைச்சி கடைகள் மூடப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

எங்களைப் பார்த்துப் பாஜகவின் பி டீம் என்பதா? – ஓவைசி கண்டனம்

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக, அனைத்து இந்திய மஜ்லிஸ் இ இத்திஹதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை முறை, எப்படி ஒருவரின் நம்பிக்கையைப் புண்படுத்துகிறது? இறைச்சியை மக்கள் வாங்குகிறார்கள், உண்ணுகிறார்கள், விற்பனை செய்கிறார்கள். ஆனால் இது எதிலும் உங்களைப் பங்கேற்கச் சொல்லி வற்புறுத்துவதில்லை. இதே தர்க்கத்தின் படி, வெள்ளிக்கிழமை தோறும் சாராயக் கடைகளை மூடலாமா?”  (வெள்ளிக்கிழமையன்று இஸ்லாமியர்களுக்குச் சிறப்பு தொழுகை இருக்கும்) என்று அவர் ட்விட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஒவைசியின் கட்சி எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை – மம்தா பானர்ஜி

”இறைச்சி என்பது பல லட்சம் இந்தியர்களின் உணவு. அதை அவமானகரமான ஒன்றாக சித்தரிக்க கூடாது” என்றும் அவர் ட்விட்டரில் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்