உலகளவில் மிக மோசமான தடுப்பு மருந்து கொள்கை பிரதமர் மோடியால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ” உலகளவில் மிகவும் மோசமான தடுப்பு மருந்து கொள்கைக்கான விருது பிரதமர் மோடிக்கு அளிக்கப்படவேண்டும். போதிய தடுப்பு மருந்துகளைக் கூட முன்கூட்டியே பெறவில்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், “மாநில அரசுகள் அதிக விலைக்கு தடுப்பு மருந்தை பெற நிர்பந்திக்கப்பட்டுள்ளன அதுமட்டுமல்லாது மாநில அரசுகள் 25% தடுப்பு மருந்து பெற மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் 74.35% மக்கள் தொகைக்கு தடுப்பு மருந்து செலுத்தும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று ஒவைசி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
The "World's Worst Vaccine Policy" award goes to @PMOIndia's govt. Govt didn't order enough doses & only 2% Indians got both doses. States are being forced to pay higher prices. Now govt has admitted that states can only get 25% of the vaccines BUT…1/2https://t.co/gyWAeUbNJx
— Asaduddin Owaisi (@asadowaisi) May 11, 2021
தடுப்பு மருந்தின் விலை குறித்து தெரிவித்துள்ள அசாசுதீன் ஒவைசி, “குவார்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஒரு தடுப்பூசியின் உற்பத்தி விலை 30 – 50 ரூபாய் வரை இருக்கக்கூடும். இந்த விலை சரி என்றால், ஒரு தடுப்பு மருந்துக்கு அரசு நிர்ணயித்துள்ள ரூ.150 என்ற ஒழுங்குபடுத்தப்பட்ட விலையே, 188% முதல் 500% வரை லாபத்தை அளித்து வருகிறது” என்று ஒவைசி தெரிவித்துள்ளார்.
இந்திய வைரசை மீது தடுப்பு மருந்து செயல்படாமல் போகலாம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
“பிரதமர் மோடியும் ,அமித் ஷாவும் எங்கே? நாடே துன்பப்படும் போது ஏன் அவர்கள் தடுப்பு மருந்தில் லாபம் ஈட்டி வருகிறார்கள் ? அவர்கள் எங்கு மறைந்திருக்கிறார்கள். எங்கு வேண்டுமானாலும் மறைந்திருக்க அவர்கள் முயற்சி செய்யலாம். ஆனால், இந்த மௌன சுவரின் பின்னால் அவர்களால் மறைய முடியாது” என்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.