Aran Sei

இரட்டை வேடும் போடும் திரிணாமூல் காங்கிரஸ் – அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம்

மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவாதகவும், கபட நாடகம் ஆடுவதாகவும், அகில இந்திய மஜ்லிஸ் இ இத்திஹதுல் முஸ்லிமீன் கட்சியின் (ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்த ஓவைசி, “திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துச் சுதந்திரம் பற்றியும், அரசியலமைப்புச் சட்டம் பற்றியும், எதிர் கருத்துகள் பற்றியும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இரண்டு முகம் உள்ளது. அவர்கள் டெல்லியில் பேசுவதற்கு நேரெதிராக மேற்கு வங்கத்தில் நடந்து கொள்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

எங்களைப் பார்த்துப் பாஜகவின் பி டீம் என்பதா? – ஓவைசி கண்டனம்

”நாங்கள் (மேற்குவங்கத்தில்) ஒரு பொதுக்கூட்டம் நடத்தக் கூட அனுமதி மறுக்கப்படுகின்றோம். நாடாளுமன்றத்தில் இவர்களின் உரைகளைக் கேட்டு பாராட்டும் மதச்சார்பற்ற-தாராளவாதிகள், அவர்களின் மாநில விவகாரங்கள் குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இஸ்லாமியர் வாக்குகளை பிரிக்க பாஜகவிடம் இருந்து பணம் வாங்கும் ஓவைசி : மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

காங்கிரஸ், இடதுசாரிகள், பாஜக போன்ற கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்தி வரும் வேளையில் தங்களுக்கு இந்த அடிப்படை உரிமை கூட மறுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள ஓவைசி, ”திரிணாமூல் காங்கிரஸ் எங்களுக்கு அனுமதி வழங்காதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் தேர்தல் – நிரூபித்த ஓவைசி; கால்பதித்த பாஜக; காணாமல் போன காங்கிரஸ்

”நாங்கள் பொதுக் கூட்டங்களை நடத்த திட்டமிட்டிருக்கும் பகுதிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகளை, நடத்தை விதிமுறைகள் அறிவிக்கப்பட்டவுடன், உடனடியாக பணிமாற்றம் செய்யக் கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவோம்” என கூறியுள்ள ஓவைசி, “நடத்தை விதிமுறை அறிவிக்கப்படுவதற்கு முன்பே, அனுமதி மறுக்கப்படும் சூழலில், தேர்தல் எவ்வாறு சுதந்திரமாகவும் ஜனநாயமாகவும் இருக்கும்?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்