Aran Sei

நுபுர் சர்மா குறித்த உச்சநீதிமன்ற கருத்துக்கள் – பாஜக வெட்கித் தலைகுணிய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கருத்து

Credit: The Indian Express

நுபுர் சர்மா குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு பாஜக வெட்கித் தலைகுணிய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

பாஜக அரசின் செயல்பாடுகளை கண்ணாடி போல உச்சநீதிமன்றம் படம் பிடித்து காட்டியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் அவதானிப்புகள் முக்கியமானவை மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டவை. இந்த கருத்துக்கள் நாடு முழுவதும் எதிரொலிக்கும் நிலையில்,அதிகாரத்தில் இருக்கும் பாஜக வெட்கித் தலைகுணிய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பதற்றத்தை உருவாக்கியதற்காக நுபுர் ஷர்மா மன்னிப்பு கோர வேண்டும் – உச்சநீதிமன்றம் கருத்து

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”அரசாங்கத்தின் செயல்பாடுகளை உச்சநீதிமன்றம் கண்ணாடிபோலப் படம் பிடித்து காட்டியுள்ளது. அதன் நடவடிக்கைகளில் இருக்கும் அடிப்படை அசிங்கத்தை சுட்டிக்காட்டியுள்ளது. வகுப்புவாத உணர்வுகளை தூண்டிவிடுவதில் இருந்து ஆதாயம் தேட பிஜேபி முயல்கிறது என்பது இரகசியமல்ல. இன்று, இந்த அழிவுகரமான பிளவுபடுத்தும் சித்தாந்தங்களை எதிர்த்துப் போராடும் நம்மில் ஒவ்வொருவரிடமும் உச்ச நீதிமன்றம் உறுதியை வலுப்படுத்தியுள்ளது.”என்று கூறியுள்ளார்.

”நாடு முழுவதும் வன்முறை தூண்டப்பட்டதற்கு பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஒருவரே பொறுப்பு என்று நீதிமன்றம் மிகச் சரியாகவே குறிப்பிட்டுள்ளது. மேலும் அவர் முழு நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். “உதய்பூரில் நடந்த துரதிருஷ்டவசமான சம்பவத்திற்கு நுபுர் சர்மாவின் கோபமே காரணம் என உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது, “என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும்; மத சகிப்புத்தன்மை வேண்டும் – நுபுர் சர்மா கருத்துக்கு எதிர்வினையாற்றிய ஐ.நா. சபை

“அரசியல் ஆதாயங்களுக்காக தேசத்தை குழப்பத்தில் ஆழ்த்தும் அனைத்து வகையான தேசவிரோத சக்திகளையும் துருவப்படுத்துவதற்கு எதிரான தனது போராட்டத்தை காங்கிரஸ் ஒருபோதும் நிறுத்தாது, மேலும் அவர்களின் வக்கிரமான நடவடிக்கைகளின் விளைவுகளை அனைத்து இந்திய குடிமக்களும் சுமக்கட்டும்” என்று ரமேஷ் கூறியுள்ளார்.

Source: Indian Express

எடப்பாடி பழனிச்சாமி உள்ளே போறது உறுதி | Nakkheeran Prakash | Kodanad | EPS | ADMK | DMK | BJP | OPS

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்