Aran Sei

டெல்லியில் கொலை செய்யப்பபட்ட குடிமை பாதுகாப்பு அதிகாரி – பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

கஸ்ட் 27 ஆம் தேதி மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட டெல்லி சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்த 21 வயதான குடிமை பாதுகாப்பு அதிகாரி சபியா, பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறிப்பட்டுள்ளது.

”பெண்ணின் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது மற்றும் விலா எலும்புகள் முறிந்துள்ளது. தலையில் மண்டை ஓட்டில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. கழுத்து, முகம், தாடை மற்றும் வாய் பகுதிகள் கத்தியால் பலமாக குத்தப்பட்டுள்ளதால், ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை

கூர்மையான பொருட்களை கொண்டு தாக்கியதால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் ரத்தக்கசிவு காரணமாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணைக் கொலை செய்ததாக முகமது நிஜாமுதீன் என்ற ஒருவர் ஒப்புக் கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கும் காவல்துறையினர், “பெற்றோர் அனுமதியின்றி அந்த பெண்ணைத் திருமணம் செய்தாகவும், அந்த பெண்ணிற்கு தவறான தொடர்புகள் இருந்ததால் கொன்றாகவும் நிஜாமுதீன் கூறியுள்ளார்” என குறிப்பிட்டுள்ளனர்

பிரேத பரிசோதனை அறிக்கையில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என குறிப்பிட்டிருப்பதை ஏற்க மறுக்கும் அவரது குடும்பத்தினர், அவர் திருமணம் ஆனவர் என்பதையும் மறுத்துள்ளனர்.

பெண்ணின் உறவினர் மோனிஷ் சைபி, “அவருக்கு யாருடனும் திருமணம் நடைபெறவில்லை. திருமணம் நடைபெற்றதாக நிஜாமுதீன் கூறியது உண்மையாக இருந்தால், அதை நிருபிக்கும் வகையில் ஆவணங்களையோ, புகைப்படங்களையோ அவர் ஆதாரமாக காட்ட வேண்டும்” என கூறியுள்ளார்.

”கொலை நடந்த இரவு, இருவரும் லஜ்பத் நகரில் சந்தித்துள்ளனர். அங்கிருந்து சுரஜ்குந்த் சென்றுள்ளனனர். அங்கு இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியதை அடுத்து அவர், அந்த பெண்ணைக் கொன்றுள்ளார்.” என தென்கிழக்கு டெல்லி மாவட்ட காவல் துணை ஆணையர் ஆர்.பி. மீனா தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என பெண்ணின் குடும்பத்தினர் ஒரு வாரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், “ பென்ணின் உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயம்,  மார்பகங்கள் அறுக்கப்பட்டுள்ளதால் இதை ஒரு தனிநபர் செய்தது போன்று தெரியவில்லை” என கூறியுள்ளனர்.

Source : The Cognate

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்