Aran Sei

கொரோனா இரண்டாவது அலை பரவலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் – எண்ணிக்கையை குறைத்து காட்டும் நிர்வாகம்

கொரோனா இரண்டாவது அலையில் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து மருத்துவமனையின் படுக்கைகளும் நிரம்பி இருக்கின்றன. ஆக்சிஜன் தேவையான அளவிற்கு விநியோகிக்கப்படவில்லை. மருத்துவர்களைச் சந்திக்க வரிசையில் காத்திருக்கும் போதே மக்கள் உயிரிழந்து வருகின்றனர். மேலும், அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையைவிட அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் எந்த நாட்டிலும் இல்லாத அளவாக நாளொன்றுக்கு 3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. மேலும், நாளொன்றுக்கும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

‘கொரோனா தீவிரமடைந்துள்ள சூழலில், ஐபிஎல் போட்டிகளை நடத்துவது பொறுத்தமற்றது இல்லையா?’ – கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட்

தகனகூடங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கூறும் தகவல்களை வைத்துப் பார்த்தால் உயிரிழப்புகள் பல மடங்கு அதிகமாக வாய்ப்பிருப்பதாகவும், அரசியல்வாதிகளும், மருத்துவமனை நிர்வாகத்தினரும் எண்ணிக்கையைக் குறைத்து காட்டுவதாகவும் வல்லுனர்கள் குற்றம்சாட்டுக்கின்றனர்.

”இது ஒரு முழுமையான தரவு (Data) படுகொலை” என இந்தியாவை நெருக்கமாக கவனித்து வருபவரும், மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணருமான பிராமர் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

”நாங்கள் மேற்க்கொண்ட அனைத்து கணக்கீடுகளின் முடிவுகளை வைத்துப் பார்த்தால் உண்மையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் எண்ணிக்கை என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட இரண்டு முதல் ஐந்து மடங்கு கூடுதலாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என அவர் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் தகன கூடத்தில் ஒரு தொழிற்சாலை இடைவிடாது செயல்படுவதை போல 24 மணி நேரமும் உடல்கள் எரியூட்டப்பட்டு வருகிறது என்றும், இதற்கு முன்பு இது போன்று தொடர்ச்சியாக உடல்கள் எரிக்கப்படுவதை பார்த்ததில்லை என்றும் அந்தத் தகன கூடத்தில் ஊழியராக பணிபுரியும் சுரேஷ் பாய் தெரிவித்தார்.

Photo Credit : Newyork Times

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் சிறிய காகிதச் சீட்டில், உயிரிழப்புக்கான காரணம் கொரோனா என்று எழுதாமல் நோய் என்றே எழுதித் தருவதாகவும் அவர் கூறினார்.  உயரதிகாரிகளிடமிருந்து வந்த உத்தரவில் பெயரிலேயே அவ்வாறு செயல்படுவதாக சுரேஷ் பதிலளித்தார்.

உயிரிழப்புகள் அதிகரிக்க ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதுவரை நூற்றுக்கணக்கான நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்துள்ளனர். இதை ’தேசிய அவசரநிலை’ என பல்வேறு தினசரிகள் தலைப்பு செய்திகளாக பிரசுரித்தன.

‘இந்தியாவிற்கு வெண்டிலேட்டர்கள், எக்ஸ்ரே இயந்திரங்கள், பிபிஇ கவச உடை வழங்க பாகிஸ்தான் முடிவு’ – தொற்றுக்காலத்தில் துணை நிற்பதாக உறுதி

 

இந்தியாவில் தடுப்பூசி செலுத்துவதில், அது தொடர்பான பிரச்சாரங்களை மேற்கொள்வதிலும் சிக்கல்கள் இருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மொத்த மக்கள்தொகையில் 10 விழுக்காட்டிற்கு குறைவானவர்களுக்கே தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டிருக்கிறது. உலகின் முன்னணி தடுப்பூசி ஏற்றுமதி நாடாக இருந்த இந்தியா இன்றைக்கு பற்றாக்குறை காரணமாக இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் தொற்றால் தடுப்பூசி, படுக்கைகள், ஆக்சிஜன் ஆகியவற்றின் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் பெரும் அளவில் அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Photo Credit : Newyork Times

மத்திய பிரதேச தலைநகர் போபாலில், 1980 ஆம் ஆண்டிற்கு பிறகு அதிக உயிரிழப்புகள் ஏற்ப்பட்டு இருப்பதாக தகன கூடத்திற்கு அருகில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். ஏப்ரல் மாததித்ன் முதல் 13 நாட்களில் 41 பேர் உயிரிழந்திருப்பதாக போபால் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. ஆனால் எங்கள் ஆய்வில் இதே காலக்கட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.

”பல இறப்புகள் பதிவு செய்யப்படுவதில்லை என்றும், அவை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்றும்” போபாலைச் சேர்ந்த  இருதய நோய் நிபுணர் ஜி.சி.கௌதம் தெரிவித்துள்ளார். மக்களைப் பீதியடைச் செய்யக் கூடாது என்பதற்காக அதிகாரிகள் இவ்வாறு செய்வதாக அவர் கூறியுள்ளார்.

‘கோவிஷீல்டின் விலையை நியாயப்படுத்தியவர்கள் கோவாக்சின் விலையையும் நியாப்படுத்துவார்களா?’ – ப.சிதம்பரம் கேள்வி

இதே போன்ற ஒரு நிலைமை தான் உத்திரபிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் நிலவி வருகிறது. 73 முதல் 120 உயிரிழப்புகள்வரை ஏற்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கும் நிலையில், நாளொன்றுக்கு 610 உயிரிழப்புகள்வரை ஏற்பட்டுள்ளது.

இறப்பு விவரங்கள் தொடர்பான ஆய்வுகளின்படி, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உட்பட பல நாடுகளில் கொரோனா உயிரிழப்புகளைக் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன.

ஆனால் இந்தியா மிகப் பெரிய நாடு அதே வேளையில் ஏழ்மையான நாடு. அதன் மக்கள் 28 மாநிலங்கள் மற்றும் பல கூட்டாட்சி பிரதேசங்களில் மிகவும் பரவலாக்கப்பட்ட ஆட்சி முறைமையில் பரவியுள்ளனர், வெவ்வேறு மாநிலங்கள் வெவ்வேறு வழிகளில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

ஆக்ஸிஜன் தாருங்கள் நன்றியோடு இருப்பேன் – அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு கொரோனா உயிரிழப்புகளும் பதிவு செய்யப்பட வேண்டும். அவர்களுக்குக் கேன்சர் போன்ற வேறு நோய்களின் பாதிப்புகள் முன்பே இருந்திருந்தால் கூட. இந்தியாவில் பல இடங்களில், அது நடப்பதாகத் தெரியவில்லை.

நியூயார்க் டைம்ஸ் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்க சுருக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்