Aran Sei

போதைப் பொருள் வழக்கில் கைதாகியிருக்கும் நடிகர் ஷாருக் கானின் மகன் – பாஜகவின் திட்டமிட்ட சதி என மகாராஷ்டிரா அமைச்சர் குற்றச்சாட்டு

போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பது பாஜகவின் திட்டமிட்ட சதி என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மகாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் தடுப்புப் பிரிவை (என்சிபி) பாஜக தவறாகப் பயன்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

லக்கிம்பூர் வன்முறை: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆர்யான் மீது பதியப்பட்டிருப்பது ஒரு மோசடி வழக்கு. கடந்த ஒரு மாதமாக அவர்களின் (பாஜக) குறி ஷாருக்கான் தான் என்ற செய்தியை ஊடகத்தினர் தெரிவித்து வந்தனர்” என குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யான் பயணித்த கப்பலில் இருந்து ஒரு கிராம் போதைப் பொருள் கூட கைப்பற்றப்படவில்லை. குற்றசாட்டப்பட்டிருக்கும் ஒருவரிடமும் போதைப் பொருள் கைப்பற்றப்படவில்லை. போதைப் பொருள் கைப்பற்றியதாக என்சிபி வெளியிட்டிருக்கும் காணொளி, அவர்களது மண்டல இயக்குநர் அலுவலகத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இது விதிமுறைகளுக்கு எதிரானது” என நவாப் மாலிக் கூறியுள்ளார்.

லக்கிம்பூர் கேரியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் – சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா

கைது செய்யப்பட்டவர்களை என்சிபி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வது குறித்து பேசிய அவர், ஆர்யானை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றது பாஜக தலைவர் மனிஷ் பனுசாலி என தெரிவித்துள்ளார்.

சுசாந்த் சிங் வழக்கை மேற்கோள் காட்டி பேசிய அவர், பாலிவுட் திரைவுலகின் பெயரைக் கெடுப்பதற்காக இது போன்ற செயல்கள் நடப்பதாக தெரிவித்துள்ளார்.

ஜிம் கார்பெட் தேசிய பூங்காவின் பெயரை மாற்றும் ஒன்றிய அரசு – ராம்கங்கா என்று பெயர் சூட்ட திட்டம்

”சுசாந்த் வழக்கில் முதல் தகவல் அறிக்கை பீகார் காவல்துறையால் பதியப்பட்டு, பின்னர் வழக்கு சிபிஐ வசம் மாற்றப்பட்டது. போதைப் பொருள் காரணமாக அவர் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. திரைத்துறையினரின் பெயரைக் கெடுக்க இது போன்ற செயல்கள் செய்யப்பட்டு வருகின்றன. திரைப்பிரபலங்கள் ஒன்றின் பின் ஒருவராக விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.” என நவாப் மாலிக் குறிப்பிட்டுள்ளார்.

”மும்பையில் உள்ள முழு பாலிவுட் திரைவுலகமும் போதைப் பொருள் கும்பலின் கூட்டாளிகளாக மாறிவிட்டது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுவிட்டது” என நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

Source : NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்