ஆர்யன் கான் வழக்கை விசாரித்து வரும் மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே பல்வேறு வழக்குகளில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து அவர் பணியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தி தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் (என்சிபி) அக்டோபர் 3 ஆம் தேதி ஆர்யன்கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து சட்டவிரோதமான போதைப் பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என போதைப் பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கும் நிலையில், நடிகர் ஷாருக்கானை குறிவைத்து அவரது மகன்மீது போலியாக வழக்கு பதியப்பட்டுள்ளதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
வரலாற்றை சார்வர்க்கருக்கு சாதகமாக எழுதாதீர்கள் – அருஞ்சொல் கட்டுரையும் ராஜன் குறை எதிர்வினையும்
இதுதொடர்பாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டனர். அண்மையில் ஆர்யன் கான் பிணையில் விடுதலையாகியுள்ளார்.
இதற்கிடையே போதைப்பொருள் வழக்கில் இருந்து ஆர்யன்கானை விடுவிக்க போதை தடுப்பு பிரிவு காவல்துறையினர் ரூ.25 கோடி பேரம் பேசியதாகவும், அதில் ரூ.8 கோடி மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவுக்கு கொடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சமீர் வான்கடே தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். இது தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு வடக்கு மண்டல துணை இயக்குனர் ஜெனரல் கியானேஷ்வர் சிங் தலைமையிலான மூன்று பேர் அடங்கிய குழு விசாரித்தது.
இந்த நிலையில் சமீர் வான்கடே போதைப்பொருள் தொடர்பான விசாரணையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் டெல்லி ஆர்.கே.புரத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சமீர் வான்கடேவுக்கு பதிலாக மூத்த காவல்துறை அதிகாரி சஞ்சய் சிங் தலைமையிலான குழு ஆர்யன் கான் வழக்கையும், சமீர் வான்கடே கையாண்ட மற்ற நான்கு வழக்குகளையும் விசாரிக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து சமீர் வான்கடே கூறும்போது, “ஆர்யன் கான் வழக்கை மத்திய பிரிவு அல்லது டெல்லி பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
ஐ.நா. சபையின் காலநிலை உச்சிமாநாடு தோல்வியடைந்து விட்டது – கிரெட்டா துன்பெர்க்
இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கூறும்போது, “தேசிய, சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற 5 வழக்குகள் மத்திய பிரிவின் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதில் ஆர்யன் கான் வழக்கும் ஒன்று”என்று தெரிவித்துள்ளனர்.
Source: NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.