கான் என்ற பெயருக்காக ஒன்றிய அரசின் அமைப்புகளால், ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் குறிவைக்கப்பட்டுள்ளார் என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
பாஜகவின் பிரதான வாக்கு வங்கியான இந்துக்களை மகிழ்விப்பதற்காக, இஸ்லாமியர்கள் குறிவைக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
”நான்கு விவசாயிகளைக் கொன்ற அமைச்சரின் மகனைக் கைது செய்து உதாரணம் காட்டாமல், கான் என்ற பெயர் வைத்திருப்பதற்காக 23 வயது இளைஞனின் பின்னால் ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் சுற்றிக் கொண்டிருக்கிறது. பாஜகவின் வாக்கு வங்கியை மகிழ்விப்பதற்காக இஸ்லாமியர்களைக் குறிவைப்பது நீதியைக் கேலி செய்வது போன்றது” என மெகப்பூபா முப்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Instead of making an example out of a Union Minister’s son accused of killing four farmers, central agencies are after a 23 year old simply because his surname happens to be Khan.Travesty of justice that muslims are targeted to satiate the sadistic wishes of BJPs core vote bank.
— Mehbooba Mufti (@MehboobaMufti) October 11, 2021
முன்னதாக, ஷாருக் கானை குறிவைப்பதற்காக அவரது மகன்மீது போலியாக வழக்கு பதியப்பட்டிருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மகாராஷ்டிரா அரசின் அமைச்சருமான நவாப் மாலிக் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.