Aran Sei

கட்டுப்பாடின்றி பரவும் கொரோனா – மாதம் 85 லட்சம் தடுப்பு மருந்துகள் கோரும் அரவிந்த் கெஜ்ரிவால்

மாதம் 85 லட்சம் கொரோனா தடுப்பு மருந்துகள் கிடைக்கப்பெற்றால், டெல்லி மக்கள் அனைவருக்கும் மூன்று மாதத்தில் தடுப்பு மருந்து செலுத்திவிடுவோம் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இன்று (மே 8), செய்தியாளர்களிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “ஃபரிதாபாத், காசியாபாத், சோனிபட், குர்கான், நொய்டா போன்ற அண்டை நகரங்களிலிருந்து தடுப்பு மருந்து செலுத்திக்கொள்வதற்காக மக்கள் டெல்லிக்கு வருகிறார்கள். ஏனெனில், இங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் எங்களிடம் போதுமான தடுப்பு மருந்துகள் கையிருப்பு இல்லை. எங்களுக்கு மாதமாதம் தேவையான எண்ணிக்கையில் தடுப்பு மருந்து கிடைக்கப்பெற்றால், மூன்று மாதங்களில் டெல்லி முழுவதும் உள்ள மக்களுக்குத் தடுப்பு மருந்து செலுத்திவிடுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

‘கோவிட்ஷீல்டு’ தடுப்பூசி பற்றாக்குறை ஜூலை மாதம்வரை நீடிக்கும் – அதார் பூனாவாலா அறிவிப்பு

இந்தக் கணக்கை விளக்கி அவர் மேலும் கூறுகையில்,  “எங்களுக்கு இதுவரை 40 லட்சம் தடுப்பு மருந்துகள் கிடைத்துள்ளன. டெல்லியில் 18 வயது தொடங்கி 44 வயது வரையுள்ளோர் ஒரு கோடி பேர் உள்ளனர். மொத்தமாக, 18 வயதிற்கு மேல் ஒன்றரைக் கோடி பேர் உள்ளனர். எங்களுக்கு மூன்று மாதங்களுக்கு 2.6 கோடி தடுப்பு மருந்துகள் தேவை. மாதத்திற்கு 80 லட்சம் தொடங்கி, 85 லட்சம் வரையிலான தடுப்பு மருந்துகள் தேவைப்படுகின்றன. டெல்லிக்கு ஒதுக்கப்படும் தடுப்பு மருந்து எண்ணிக்கையை உயர்த்த ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியுள்ளேன்.” என்று அவர் கூறியுள்ளார்.

Source : NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்