டெல்லியில் உள்ள அஸோலா வனவிலங்கு சரணாலயத்தில் 1 லட்சம் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி டெல்லி அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கான விழா மேடை அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது அங்கு வந்த டெல்லி காவல்துறையினர், விழா மேடையில் பிரதமர் நரேந்திர மோடியின் பேனர்களை இல்லாததை கண்டனர்.
இதனைத் தொடர்ந்து மேடையில் மோடியின் பேனர்களை வலுக்கட்டாயமாக கட்டியதோடு, அதை யாரும் அகற்றிடாமல் காவலுக்கு இருந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தகவலை அறிந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நிகழச்சியில் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய், ”நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை டெல்லி காவல்துறையினர் நேற்று இரவே தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இது முழுக்க முழுக்க மாநில அரசாங்கம் சார்பில் நடத்தபடும் நிகழ்ச்சி என்பதால், பிரதமரின் படங்கள் அங்கு வைக்கப்படவில்லை. ஆனால், டெல்லி காவல்துறையினர் பிரதமரின் பேனர்களை வைத்ததோடு, அதற்குக் காவலுக்கு இருந்துள்ளனர். மேலும், டெல்லி அரசின் பேனர்களையும் கிழித்துள்ளனர். இதை டெல்லி அரசிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சியாக கருதுகிறோம். இதனால், நிகழ்ச்சியை புறக்கணிக்க முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும், நானும் முடிவு செய்தோம். ”என்று தெரிவித்துள்ளார்.
Source: Puthiyathalaimurai
சிலை கடத்தல்காரர்களுடன் கூட்டு | பொன்மாணிக்கவேலை விசாரிக்கும் CBI | Ponmanikavel | Idol
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.