இன்றைய இந்தியாவை தலைகீழாக நகரும் விமானத்துடன் ஒப்பிட்டுள்ள புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் அருந்ததி ராய், இந்தியா ஒரு விபத்தை நோக்கி செல்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வலரும் பேராசிரியருமான ஜி.என்.சாய்பாபா எழுதிய கவிதைகள் மற்றும் கடிதங்களின் தொகுப்பான ‘ஏன் என் வழியைக் கண்டு இவ்வளவு பயப்படுகிறீர்கள்?’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று (மே 4) நடைபெற்றுள்ளது.
அவ்விழாவில் கலந்துக்கொண்டு பேசியுள்ள அருந்ததி ராய், “1960களில் செல்வத்தையும் நிலத்தையும் பங்கீடு செய்வதற்காக உண்மையான புரட்சிகர இயக்கங்களை முன்னெடுத்துச் சென்ற தலைவர்கள், இப்போது, தேர்தல் வெற்றிக்காக ‘5 கிலோ அரிசி, 1 கிலோ உப்பு’ விநியோகம் என்ற பெயரில் வாக்குகளை நாடி செல்ல தொடங்கிவிட்டனர்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
’அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட சிறையில் அனுமதி இல்லை’ – பேராசிரியர் சாய்பாபாவின் வழக்கறிஞர்
“அண்மையில் எனது விமானி நண்பர் ஒருவரிடம், ‘விமானத்தை பின்னோக்கி பறக்க வைக்க முடியுமா?’ என கேட்டேன். அவர் சத்தமாக சிரித்தார். நான் சொன்னேன், ‘இந்த நாட்டின் தலைவர்கள் விமானத்தை தலைகீழாக பறக்க வைக்கும் வேலையைதான் செய்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லாம் வீழ்ச்சியடைந்து வருகிறது. நாம் ஒரு விபத்தை நோக்கிச் செல்கிறோம்’ என சொன்னேன்” என்று அவர் கூறியுள்ளார்.
“உங்களின் சாதி, வர்க்கம், பாலினம் மற்றும் இனம் ஆகியவற்றைப் பொறுத்து சட்டங்கள் வித்தியாசமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இன்றைக்கு நாம் என்ன செய்துக்கொண்டிருக்கிறோம்? 90 விழுக்காடு முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு, ஏழு ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேராசிரிரை பற்றி பேசுவதற்குதான் சந்திக்கிறோம். அதைத்தான் செய்துக்கொண்டிருக்கிறோம். இது போதும். இனி மேலும் கூற வேண்டியதில்லை. இதுவே போதும் நாம் எந்த நாட்டில் வாழ்கிறோம் என்று சொல்ல. இது எப்பேற்பட்ட அவமானம்?” என்று அருந்ததி ராய் கேள்வி எழுப்பியுள்ளார்.
`மருந்துகளைக் கூட கொடுக்க மறுக்கிறார்கள்” – பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரம் இருக்க முடிவு
90 விழுக்காடு மாற்றுத்திறனாளியான பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா, சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர். 2017 ஆம் ஆண்டு, மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம், ஜி.என்.சாய்பாபா மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு வைத்திருந்ததற்காகவும், நாட்டிற்கு எதிராகப் போரை நடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் கூறி, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (உபா சட்டம்) கீழ் ஜி.என்.சாய்பாபா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Source: PTI
நான் ஆந்திரா போகணுமா? I சீமான் ஒரு எட்டப்பன் I Kamatchi Naidu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.