Aran Sei

கோவிலில் பரதமாட இஸ்லாமிய கலைஞர் மான்சிக்கு தடை: எதிர்ப்பு தெரிவித்து திருவிழாவில் இருந்து விலகிய சக கலைஞர்கள்

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கூடல்மாணிக்யம் கோயில் நிகழ்வில் இஸ்லாமியரான பரதநாட்டிய கலைஞர் மான்சியாவின் நடன நிகழ்ச்சி தடை செய்யப்பட்டதற்கு சக கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருச்சூரில் உள்ள இரிஞ்சாலக்குடாவில் உள்ள கூடல்மாணிக்யம் கோயில் 10 நாள் திருவிழாவிற்குத் தயாராகி வருகிறது. இதில் சுமார் 800 கலைஞர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். இக்கோயில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேவசம் போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

கேரளா: இஸ்லாமியர் என்பதால் பரதநாட்டிய கலைஞர் மான்சியாவின் கோயில் நடன நிகழ்ச்சிக்கு தடை

ஏப்ரல் 15 முதல் 25 வரை நடத்தப்படும் இந்த நிகழ்வில் மான்சியாவின் நடன நிகழ்ச்சி தடை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடனக் கலைஞர்களான அஞ்சு அரவிந்த், கார்த்திக் மணிகண்டன் மற்றும் தேவிகா சஜீவன் ஆகியோர் கோயில் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் விலகியுள்ளனர்.

கலையும், கலைஞர்களும் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நான் நம்புகிறேன் என்று அஞ்சு அரவிந்த் தன்னுடைய பேஸ்புக்கில் பதிவொன்றை எழுதியுள்ளார். தனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த கலைஞர்களுக்கும் மான்சியா நன்றி தெரிவித்துள்ளார்.

தனக்கு எந்த மதமும் இல்லை என்று தெரிவித்துள்ள மான்சியா இது சம்பந்தமாக பேஸ்புக் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

இஸ்லாமிய பரதநாட்டிய கலைஞர் மான்சியாவின் கோயில் நடன நிகழ்ச்சிக்கு தடை: மதவாதம் வளர்கிறது என கேரளத்தின் முன்னாள் அமைச்சர் சைலஜா கருத்து

“கலையும் கலைஞர்களும் சாதி, மதத்தால் பின்னிப்பிணைந்துள்ளனர். ஒரு மதத்திற்குத் தடை விதிக்கப்பட்டால், அது மற்றொரு மதத்தின் ஏகபோகமாக மாறுகிறது. இந்த அனுபவம் எனக்குப் புதிதல்ல. நமது மதச்சார்பற்ற கேரளாவில் எதுவும் மாறவில்லை என்பதை இங்கே நினைவூட்டுவதற்காகவே நான் அதை பேஸ்புக்கில் பதிவு செய்கிறேன்” என்று மான்சியா அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Source : newindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்