இந்திய அரசியலமைப்பில் 370வது பிரிவு தற்காலிகமானது தான் என்றாலும், இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைய காரணமாக இருப்பதால் அதை நீக்க முடியாது என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை நீக்கிய ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்கள் கோடை விடுமுறைக்கு பிரிசீலிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், உமர் அப்துல்லா இவ்வாறு கூறியுள்ளார்.
பூஞ்ச் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவர், தன்னுடைய இரண்டாவது நாள் பயணத்தின்போது சூரன்கோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
”இந்தியாவில் காஷ்மீர் இணைக்கப்பட்டபோது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தீர்மானம் எடுத்துச் செல்லப்பட்டது. அதன் அடிப்படையில், 370வது சட்டப்பிரிவிற்கு நிரந்தர அந்தஸ்து வழங்கப்படவில்லை” என்று உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
”ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, அதை இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாது என்று நீங்கள் கூறும்போது, அதற்கு அடிப்படையாக இருக்கும் சட்டப்பிரிவை நீக்க முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் 370 வது சட்டப்பிரிவு நீக்கமும் மக்கள் உயிரிழப்பும் – ஒன்றிய அரசு தகவல்
இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் இதுகுறித்து விவாதிக்க உமர் அப்துல்லா மறுத்துவிட்டார். கோடை விடுமுறைக்கு பின்பு வழக்கை விசாரிக்க நீதிமன்றம் ஒப்புகொண்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ”விசாரணை தொடங்கட்டும், எங்கள் வாதத்தை நாங்கள் முன்வைப்போம்” என்று கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது குறித்து பேசிய உமர் அப்துல்லா, ”மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக தரம் குறைத்ததற்கான உதாரணம் இதுவரை இல்லை. கடந்த காலங்களில் மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருந்தாலும், அவை யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படவில்லை. ஒரு மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.” என்று தெரிவித்துள்ளார்.
“பிற மாநிங்களைப் பிரிக்குபோது ஆளும் அரசுகள் அதற்கான காரணங்களை சொல்லிவிடுகின்றன. ஜம்மு காஷ்மீரை எதற்காக இரண்டு யூனியன்களாகப் பிரித்தார்கள் என்பதை யாராலும் விளக்க முடியாது. ஒரு வேளை பாஜக அதன் தேர்தல் அறிக்கையில் இதுபற்றிக் கொடுத்திருந்தால், ஏதாவது புரிந்திருக்கும்” என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
Source: The Indian Express
RSS Agenda வை நிறைவேற்றிய போலி தமிழ்தேசியவாதிகள் Manoj kumar Interview | Mullivaikkal Annamalai Bjp
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.