‘விளம்பரத்திற்காகவே விவசாயிகள் சங்கத் தலைவரின் வாகனத்தை தாக்கினேன்’ – பாஜக மாணவர் தலைவர் வாக்குமூலம்

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் மீதான தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் தலைவர், தான் விளம்பரத்திற்காக இதை செய்ததாக காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.