Aran Sei

‘விளம்பரத்திற்காகவே விவசாயிகள் சங்கத் தலைவரின் வாகனத்தை தாக்கினேன்’ – பாஜக மாணவர் தலைவர் வாக்குமூலம்

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் மீதான தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் தலைவர், தான் விளம்பரத்திற்காக இதைச் செய்ததாக காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நேற்று முன்தினம் (ஏப்ரல் 2) ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில், ராகேஷ் திகாயத்தின் வாகனங்கள் மீது ஒரு குழு கற்கள் வீசியது. அதனால், அவரது காரின் பின்புற விண்ட்ஷீல்டு சேதமடைந்தது. மேலும், அக்குழு கம்புகளை வைத்தும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

‘அதிகாரத்தின் தாக்குதலே எங்களை பலப்படுத்தும்’ – விவசாயிகள் சங்கத்தலைவர் ராகேஷ் திகாயத்

இதுதொடர்பாக, பாஜகவின் மாணவர் அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தை (ஏபிவிபி) சேர்ந்த மாணவர் தலைவர் குல்தீப் யாதவை, ஆல்வார் மாவட்ட காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வந்தனர்.

2019-ம் ஆண்டு, அல்வரில் உள்ள மத்ஸ்யா பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் சுயேட்சி வேட்பாளராக போட்டியிட்ட குல்தீப் யாதவ், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப்பின் அவர் ஏபிவிபியில் இணைந்திருக்கிறார்.

பத்திரிகையாளருக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த ஏபிவிபி உறுப்பினர் : கைது செய்த ராஜஸ்தான் காவல்துறை

குல்தீப் யாதவுடன் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று பாஜக மறுத்து வந்த அதேவேளையில், பாஜக மாநிலத் தலைவர், ஏபிவிபி மாநிலத் தலைவர் உட்பட பாஜக தலைவர்களுடன் குல்தீப் யாதவ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளானது.

இந்நிலையில், முடிவடைந்த முதற்கட்ட விசாரணை தொடர்பாக ஆல்வார் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் குருஷரன் ராவ், “குல்தீப் யாதவ் அரசியலில் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்க முயற்சித்து வருகிறார். அதன் காரணமாக, ராகேஷ் திகாயத் மீது தாக்குதல் நடத்தினால், தன் மீது தனியான கவனம் கிடைக்கும் என்று எண்ணியே இதைச் செய்ததாக எங்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.”  என்று தெரிவித்துள்ளார்.

கட்டாய மதமாற்றுவதாக மிரட்டிய ஏபிவிபி அமைப்பினர்- கேரள கன்னியாஸ்திரிகள் காவல் நிலையத்தில் புகார்

மேலும்,  குல்தீப் யாதவ் தனது மாமாவிடமிருந்து கடன் வாங்கி, இத்தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு ரூ.50,000 வழங்கியுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.

Source : New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்