Aran Sei

உபா சட்டத்தில் கைதாகும் பழங்குடியினரின் எண்ணிக்கை அதிகரிப்பு – பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் தகவல்

ட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படும் பழங்குடியினர்களின் எண்ணிக்கை, 2017 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கு இடையில் அதிகரித்துள்ளது என்று பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேசிய குற்றப் பதிவு ஆணையம் அத்தகைய தரவைப் பராமரிக்கவில்லை என்றாலும், இந்தக் கூடுதல் தகவல்களை அரசு நிறுவனங்களிடமிருந்து பெற்றோம் என்று பழங்குடியினரின் எண்ணிக்கை குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சகம் பதிலளித்துள்ளது. அதேநேரம், அக்கைதிகளுக்கு விரைவான விசாரணையை உறுதி செய்ய என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்ற கேள்விக்கு அமைச்சகம் பதிலளிக்கவில்லை.

மக்களுக்காக வாழ்வை அர்பணித்த பழங்குடியின உரிமை போராளி ஸ்டான் சாமி – கைது முதல் மரணம் வரை

அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, உபா சட்டத்தின் கீழ் சிறையிலுள்ள பழங்குடி கைதிகளின் எண்ணிக்கை 2017-ல் 4,098 ஆகும். இது 2018-ல் 4,862 ஆக அதிகரித்தது. 2019-ல் இந்த எண்ணிக்கை 5,645 ஆக இருந்தது. அந்த ஆண்டில், உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 1,519 பழங்குடியினர் சிறையில் இருந்துள்ளனர். இது 2017-ல் 784 ஆக இருந்தது.

தமிழ்நாட்டில் 2017-ல் 8 ஆக இருந்த பழங்குடியின கைதிகளின் எண்ணிக்கை, 2019-ல் 141 ஆக மாறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்