Aran Sei

‘பேரறிவாளனுக்கு கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து’ – விடுப்பு வழங்க முதல்வருக்கு அற்புதம்மாள் கோரிக்கை

ல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு தொற்று ஏற்படும் ஆபத்து உண்டு என்பதால், அவருக்கு நீண்ட விடுப்பு வழங்க முதல்வர் பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அற்புதம்மாள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து, இன்று (மே 18), தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “சிறைகளில் பரவி வரும் கொரோனா கிருமி தொற்றும், மரணங்களும் மிகுந்த அச்சத்தை தருகிறது. ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அறிவுக்கு தொற்று ஏற்படும் ஆபத்து உண்டு என சிறைத்துறை மருத்துவர்கள் ஏற்கனவே அறிக்கை தந்துள்ளனர். மேலும் அறிவுக்கு தடைபட்டுள்ள மருத்துவத்தை தொடர வேண்டியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இதனைக் குறிப்பிட்டு நீண்ட விடுப்பு வழங்கக் கோரி 10ம் தேதி மனு அனுப்பியுள்ளேன். உச்ச நீதிமன்றம் 90 நாட்கள் விடுப்பு வழங்கலாமென 7 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. எனவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் கனிவுடன் பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்கக் கேட்டுகொள்கிறேன்” என்று அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்