Aran Sei

‘கொரோனா தொற்று காலத்தில் மனித நேயமின்றி எங்ஙனம் செயல்பட முடிகிறது’ – தமிழக அரசுக்கு அற்புதம்மாள் கேள்வி

பேரறிவாளன் விடுதலை தொடர்பான விவகாரத்தில், “கொடிய கொரோனா தொற்று காலத்தில் குறைந்தபட்ச மனித நேயமின்றி எங்ஙனம் செயல்பட முடிகிறது” என்று தமிழக அரசை அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, இன்று (ஏப்ரல் 26), தனது ட்விட்டர் பக்கத்தில், “மாநில அமைச்சரவை பரிந்துரையை 2 ஆண்டுக்கு மேல் கிடப்பில்போட்டு, மாநில உரிமையான 161-ஐ ஆளுநர் அவமதித்து 90 நாட்கள் முடிந்தது. அரசு தனது இறைமையை காக்க சட்ட நடவடிக்கை எடுக்காதது தாங்கொனா வேதனை அளிக்கிறது.” என்று அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

மேலும், கொடிய கொரோனா தொற்று காலத்தில் குறைந்தபட்ச மனித நேயமின்றி எங்ஙனம் செயல்பட முடிகிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலையாகிறார் பேரறிவாளன் – நான்கு நாட்களில் ஆளுநர் முடிவை அறிவிப்பார் என மத்திய அரசு தகவல்

2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தமிழக அமைச்சரவை கூடி, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ஜெயகுமார், ரவிச்சந்திரன், ராபர் பயாஸ் ஆகியோரை விடுதலை செய்ய முடிவெடுத்தது.

அமைச்சரவையின் அந்த பரிந்துரை, 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி, தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பரிந்துரை மீது, சுமார் 3 ஆண்டுகளாக  தமிழக ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், உச்சநீதிமன்றம் இதுகுறித்து கேள்வி எழுப்பியது.

கடந்த பிப்ரவரி மாதம், ஆளுநர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட பதிலில், பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுப்பதற்கு, குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்