Aran Sei

‘தேசதுரோகி அர்னாப் கோஸ்வாமியை கைது செய்’ – மகாராஷ்ட்ராவில் வலுக்கும் எதிர்ப்பு

credits : the indian express

டிஆர்பி மோசடி வழக்கில், மும்பை காவல் துறையினர் தாக்கல் செய்துள்ள கூடுதல் குற்றப் பத்திரிகையுடன், ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வு கவுன்சிலின் (பார்க்) முன்னாள் தலைமை செயல் அதிகாரிக்கும், ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கும் இடையில், வாட்ஸ் ஆப் மூலம் நடைபெற்ற சுமார் 1000 பக்கங்கள் கொண்டுள்ள உரையாடல் இணைக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு, பிப்ரவ்ரி 23 ஆம் தேதி  நடந்த உரையாடலில் அர்னாப் கோஸ்வாமி ஒரு மிகப்பெரிய விஷயம் நடைபெறவுள்ளது என்று கூறுகிறார். அதற்கு தாவுத் இப்ராஹிம் தொடர்பானதா என்று பிரதோ தாஸ் கேட்கின்றார். அதற்கு அர்னாப், பாகிஸ்தான் தொடர்பானது என்றும், இந்தமுறை மிகப்பெரிய அளவில் நடைபெறவுள்ளதாகவும் பதில் அளிக்கிறார்.

அதன் பிறகு, இது வெறும் தாக்குதலா அல்லது அதை விடப் பெரியதா என்று பிரதோ தாஸ் கேட்கின்றார். அதற்கு அர்னாப், வழக்கமான தாக்குதலை விட பெரியது என்றும் காஷ்மீர் தொடர்பான மிகப்பெரிய விஷயமும் கூட என்று பதில் அளிக்கிறார்.

அர்னாப் கோசாமியின் முறைகேடு அம்பலம் – டிஆர்பி வழக்கில் சிக்கும் தமிழ் செய்தி சேனல்?

அர்னாபுக்கும், பிரதோ தாசுக்கும் இடையில் இந்த உரையாடல் நடைபெற்று மூன்று நாள் கழித்து, 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் நாள், இந்திய விமானப்படை, காஷ்மீரில் உள்ள இந்திய எல்லையை கடந்து, பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் உள்ள பாலகோட் நகரில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. ராணுவ ரகசியம் மூன்று நாட்களுக்கு முன்னர் அர்னாப் கோஸ்வாமி கிடைத்தது எப்படி என்று பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

ராணுவ ரகசியங்களை முன் கூட்டியே அறிந்திருந்தாரா அர்னாப்? – டிஆர்பி முறைகேட்டில் வெளிப்பட்ட அதிர்ச்சியளிக்கும் ஆதாரம்

இந்நிலையில் மகாராஷ்ட்ரா காங்கிரஸ் தலைவர் சச்சின் சவந்த் தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை நேரில் சந்தித்து அர்னாப் கோசாமியின் வாட்ஸ் அப் உரையாடல் குறித்து நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர். மாநில அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அனைத்து உரிமையும் இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.

40 ராணுவ வீரர்களின் மரணத்தை கொண்டாடும் ’தேசியவாதி’ – அர்னாப்பை கிண்டல் செய்த சசி தரூர்

மாநில அரசு ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய கோரிய மகாராஷ்ட்ரா காங்கிரஸ் தலைவர்கள் அர்னாப் கோசாமி மற்றும் பிரதோ தாசிற்கு இடையேயான உரையாடல் ”தேசதுரோகம்” என குறிப்பிட்டுள்ளனர்.

”தாக்குதல் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் (பிப்ரவரி 23, 2020 ) கோஸ்வாமி எவ்வாறு இராணுவ நடவடிக்கை குறித்த தகவல்களைப் பெற்றார். இந்த தகவலை தனக்கு வழங்கியவர் மோடி அரசாங்கத்தில் ஒரு பெரிய நபர் என்று அவரே கூறியுள்ளார். இவை அனைத்தையும் விசாரிக்கப்பட வேண்டும். அர்னாப் கோசாமி செயல்பட்ட விதம் அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம், 1923 ஐ மீறுவதாகும். ” என சச்சின் சவந்த் கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அரசின் ரகசியம் அர்னாபுக்கு தெரிந்தது எப்படி? – ராஜ்நாத் சிங்கிடம் கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம்

ரிபப்ளிக் தொலைகாட்சியும் அர்னாப் கோசாமியும் பல சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டிய சச்சின் சவந்த, மகாராஷ்ட்ரா அரசு அர்னாப் கோஸ்வாமியை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“தேர்தல் வெற்றிக்காக அணு ஆயுத நாடுகளை போரின் விளிம்பிற்குத் தள்ளினார் மோடி” – இம்ரான் கான் குற்றச்சாட்டு

தேசபாதுகாப்பு தொடர்பான விஷயம் என்பதால் இந்த விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ள சட்ட ஆலோசனைகளை கேட்டு வருவதாகவும். அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும் மகராஷ்ட்ராவின் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளதார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்