Aran Sei

இந்தியாவின் பாதுகாப்பிற்கு அர்னாப் ஏற்படுத்திய அச்சுறுத்தல் – விரிவான விசாரணை தேவை என எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

ர்னாப் கோசாமிக்கும், ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வு கவுன்சிலின் (பார்க்) முன்னாள் தலைமை செயல் அதிகாரி பிரதோ தாஸ் குப்தாவுக்கு இடையில் நடைபெற்றதாக கூறப்படும் உரையாடல் தொடர்பாக முழுமையான விசாரணை தேவை என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

அந்த உரையாடலில் பல விஷயங்கள் தேசத்தின் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் உரிய விசாரணை தேவை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

டிஆர்பி வழக்கில் வசமாக சிக்கிய அர்னாப் – பாஜக ஆதரவை பயன்படுத்தி காரியம் சாதித்தது அம்பலம்

இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா “நிதி மோசடிகள் எவ்வாறு நடந்துள்ளன, உயர் மட்டத்தில் உள்ள அதிகாரிகளின் தொடர்பு மற்றும் சில உரையாடல்களில் நீதிபதிகளை விலைக்கு வாங்குவது, அமைச்சர்களின் பொறுப்புகளை மாற்றுவது குறித்தும் பேசப்பட்டுள்ளது. இது தேசத்தின் பாதுகாப்புடன் விளையாடுவது மற்றும் ஆள்பவர்களின் கையாளாகாததனத்தை காட்டுகிறது” என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்த உரையாடல்கள் 1000 பக்கத்திற்கு மேல் இருப்பதால், அதை விரிவாக ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ள ரந்தீப் சுர்ஜேவாலா, இன்னும் ஓரிரு நாளில், கட்சியின் தலைமை தனது கருத்தை தெரிவிக்கும் என்றும் கூறியுள்ளார்.

டிஆர்பி வழக்கில் வசமாக சிக்கிய அர்னாப் – பாஜக ஆதரவை பயன்படுத்தி காரியம் சாதித்தது அம்பலம்

டிஆர்பி மோசடி வழக்கில், மும்பை காவதுறையினர் தாக்கல் செய்துள்ள கூடுதல் குற்றப் பத்திரிகையுடன், ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வு கவுன்சிலின் (பார்க்) முன்னாள் தலைமை செயல் அதிகாரிக்கும், ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோசாமிக்கும் இடையில், வாட்ஸ் ஆப் மூலம் நடைபெற்ற உரையாடலும் இணைக்கப்பட்டுள்ளது.

சுமார் 1000 பக்கங்களுக்கு நீண்டுள்ள இந்த உரையாடல்கள், தற்போது கைது செய்யப்பட்டுள்ள, பார்க் அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பிரதோ தாஸ் குப்தாவும், அர்னாப் கோசமியும் ராணுவ ரகசியம்  உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்